பக்கம்:படித்தவள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

47


என்பது அந்தக் குறட்பா.

சோ என்றால் சோகம், சோர்வு என்ற பொருள் தருகிறது. இச்சொற்களில் கடைக் குறையோ இது என்று நடைமுறையில் எண்ணத் தோன்றுகிறது. சோ என்ற நடிகர் ஒருவர் எழுத்தாளராகவும் இருந்து சோர்வினைப் போக்கி வருகிறார் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

நகைச்சுவையாகப் பேசுவதில் நயத்தக்க சாதனை படைத்தவர் இந்த ‘சோ’. தமிழில் நகைச் சுவை விருந்து நல்கிய நல்லோர்கள் இல்லாமல் இல்லை.

“எட்டே கால் லட்சணமே எமனேறும் பரியே” என்று அவ்வையார் யாரையோ விளித்தாராம்.

அவன் உச்சி குளிர்ந்து விட்டானாம்; எட்டும் காலும் கூடிய அளவு அழகும் பொலிவும் உடையவன் எனவும், எமன் ஏறும் வாகனம் எனவும் தன்னைச் சிறப்பித்ததாகக் கருதிக் கொண்டானாம். பிறகு தெரிந்தது; தான் அவலட்சணம் என்றும் எருமைக்கடா என்றும் இழித்துக் கூறி இருக்கிறார் என்பது.

கழகப் பதிப்பில் தமிழில் எண்கள் எழுதுவார்கள். எட்டு என்பதற்கு ‘அ’ என்றும் கால் என்பதற்கு ‘வ’ என்றும் அச்சிடுகிறார்கள். இது தமிழ் எண்கள் ஆக ‘அவ’ என்றால் எட்டே கால் என்பதை உணர்த்துகிறது. எமனேறும் வாகனம் எருமைக்கடா; நயமாகப் பேசுவதில் நாயகமாகவும் தமிழ்ப் புலவர்கள் விளங்கி இருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/49&oldid=1139510" இலிருந்து மீள்விக்கப்பட்டது