பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 239 தீர்மானித்தீர்கள்? நீங்கள் மனசு வைத்தால் ஒரு நிமிஷத்தில் எங்கிருந்தாவது பணம் சம் பாதித்துக் கொண்டு வந்துவிட மாட்டீர்களா? - மாசிலாமணி:- (நிரம்பவும் வாஞ்சையான குரலில் பேசத் தொடங்கி) நாம் மனசு வைப்பதில் என்ன உபயோகம்? நீ மாத்திரம் கொஞ்சம் மனசு வைத்து எனக்கு அந்த விஷயத்தில் உதவியாக இருப்பாயானால், அந்தத் தொகை ஒரு நிமிஷத்தில் கிடைக்கும். எங்கே? உதவி செய்வதாகச் சொல். நீ நிரம்பவும் நல்ல குணமுடையவள் என்பது எனக்குத் தெரியும். சமயத்தில் நீ ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டாய். இந்த விஷயத்தில் நீ ஒத்தாசை செய்தால், நான் உன்னை எந்த விஷயத்துக்கும் கோபித்துக் கொள்வதே இல்லையென்று பிரமாணம் செய்து கொடுக்கிறேன். நீயாக முதலில் ஆரம்பித்துச் சண்டைக்கு இழுத்தால் அன்றி மற்றபடி நான் உன் ஜோலிக்கே வர மாட்டேன் என்பதை நீ உறுதியாக நம்பலாம். மனைவி:- (விரக்தியாக நெடுமூச் செறிந்து) நீங்கள் இந்த மாதிரி இதற்குமுன் எத்தனையோ தடவை உறுதி சொல்லி யிருக்கிறீர்கள். இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மனசிலுள்ள யோசனையைத் திறந்து சொல்லுங்களேன். நான் உடனே என் எண்ணத்தைச் சொல்லிவிடுகிறேன். மாசிலாமணி:- (ஆழ்ந்த கருத்தோடு அவளது முகத்தை உற்று நோக்கி) நான் சொல்வதற்கு அதிகமாக ஒன்றுமில்லை. நீ மனசு வைத்தால் வெகுசீக்கிரத்தில் அந்த இரண்டாயிரம் ரூபாயைச் சம்பாதித்து விடலாம். - மனைவி:- (ஒருவித ஆவலும், ஆத்திரமும் அடைந்து) நான் மனசு வைத்தால் என்றால், அதன் அர்த்தம் நன்றாக விளங்கவில்லையே. நான் எங்கே போய் யாரிடத்தில் கேட்கிறது? go.g.H-16