உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

கடலில் ஒரு கப்பலையோ, ஓடத்தையோ காணவில்லை. அவள் மேற்கொண்டு எங்கே செல்லமுடியும்? கடற்கரையிலுள்ள வழவழப்பான உருண்டைக் கற்களை அவள் பார்த்தாள். தன் கைகளைவிட மென்மையாக இருந்த கடல் நீர் அந்தக் கற்களை உருட்டி, நாளடைவில் அவ்வளவு மென்மையாகச் செய்திருக்கிறது. 'இதே போல நானும் உழைப்பேன். கடல் அலைகளைப் போல நானும் ஓயாமல் அலைவேன். நாளடைவில் நானும் என் உடன்பிறந்தார்களைச் சந்திக்கவே செய்வேன்!' என்று அவள் அங்கேயே உறுதி செய்து கொண்டாள்.

கதிரவன் மறையும் நேரத்தில், எழிலி வானத்தில் பதினொரு அன்னங்கள் கரை நோக்கிப் பறந்து வருவதைக் கண்டாள். கிழவி கூறியபடியே அவைகளின் தலைகளில் சிறு பொன் முடிகள் இருந்தன. ஒன்றன் பின் ஒன்றாக, அவை பறந்து வந்தது ஆகாயத்தில் ஒரு வெள்ளை நாடா பறப்பது போல் இருந்தது. எழிலி கரையில் ஒரு புதருக்குப் பின்புறம் சென்று மறைந்து கொண்டாள். அன்னங்கள் கரையில் இறங்கி, தங்களுடைய பரந்த சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தன.

கதிரொளி மறைந்தபின், அவைகள் தங்கள் இறகுகளையெல் லாம் உதிர்த்துவிட்டு, பதினொரு அழகிய இளவரசர்களாகி விட்டன. அவர்கள் எழிலியின் சகோதரர்களே! அவர்கள் எவ்வளவு மாறியிருந்த போதிலும் அவள் அவர்களை ஒரு நொடியில் தெரிந்து கொண்டு விட்டாள். உடனே புதரிலிருந்த அவள், அவர்கள் நடுவே பாய்ந்து, ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி அழைத்தாள். அவர்களும் தங்கள் சின்னஞ்சிறு சகோதரி எவ்வளவு பெரியவளாகவும், அழகாகவும் வளர்ந்துவிட்டாள் என்று ஆச்சரியப்பட்டனர். ஒருவர் மாறி ஒருவராக அவர்கள் அவளைப் பிடித்து இழுத்துக் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்; அழுதார்கள்; சிற்றன்னை தங்களுக்குச் செய்த தீமைகளைப் பற்றிப் பேசினார்கள்.

பிறகு எல்லோருக்கும் மூத்தவன் தங்கள் வரலாற்றைச் சுருக் கமாகச் சொன்னான். 'சூரியன் உதித்தவுடன் நாங்கள் அன்னங்க ளாகி ஆகாயத்தில் பறக்கிறோம். அது மலைவாயிலில் விழும் பொழுது நாங்கள் மீண்டும் மனித உருப் பெறுகிறோம். ஆதலால் சூரியன் மறையும் இடத்திற்கு எவ்வளவு அருகிலே இருக்க முடியுமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/9&oldid=1055197" இலிருந்து மீள்விக்கப்பட்டது