|7 'இராஜாதி ராஜருக்குக் குயில் கொணர்ந்த தலைவர்' என்ற பட்டமும் அளிக்கப்பட்டது. இரண்டு குயில்களும் சேர்ந்து பாடவேண்டும், ஜோடியாகப் பாடினல் எவ்வளவு நேர்த்தியா யிருக்கும் ' என்று பலர் கருத்துத் தெரிவித்தனர். அவைகள் சேர்ந்து பாடின. ஆனல் கீதங்கள் மாறுபட்டன. உயிருள்ள குயில் தன் பிரியம்போல் ஓர் இசையைப் பாடியது; பொம்மைக் குயில் தன்னுள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த ஒரே கீதத்தைத்தான் பாட முடிந்தது. இதல்ை ஒன்றும் குற்றமில்லை! பொம்மைக் குயில் தாளம் பிசகாமல் பாடுகிறது' என்று பாராட்டினர் அரண்மனைச் சங்கீத வித்துவான். பிறகு பொம்மைக் குயிலே தனியாகப் பாடிக்கொண்டிருந்தது. உண்மைக் குயிலைப் போலவே அதற்கும் பாராட்டுகள் வந்து குவிந்தன. மேலும் அதன் இரத்தினங்களும், கற்களும், தங்கமும், வெள்ளியும் அதை மேம்படுத்திக் காட்டின. ஒரே இசையை அது முப்பத்துமூன்று தடவை பாடிற்று. ஆயினும் களைப்படையவில்லை. ஜனங்கள், மீண்டும் ஒரு முறை
பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/47
Appearance