68
அரசரும், அரசியும், அதிகாரிகள் பலரும் இளவரசி இரவில் போய்வந்த இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக அரண்மனையை விட்டு வெளியே வந்தார்கள். அடையாளம் காட்டுவதற்காகத் தாதிக் கிழவியும் கூடச் சென்ருள்.
ஒரு கதவில் சிலுவைக் குறி இருப்பதைக் கண்ட அரசர் அந்த வாயிலில் நின்று, குறி இதோ இருக்கிறது' என்ருர்,
இராணி வேருெரு கதவிலும் அந்தக் குறி இருப்பதைக் கண்டு, "இதோ பாருங்கள்!' என்ருள்.
அதிகாரிகள் வேறு பல இடங்களிலும் அந்தக் குறி இருப் பதைத் தெரிவித்தார்கள்.
ஆதலால் வீட்டைக் கண்டுபிடிப்பது வீண் வேலை என்று கண்டு எல்லோரும் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார்கள்.
அரசி புத்திசாலி ஆதலால் அவள் ஒரு யுக்தி செய்தாள். பட்டி ல்ை ஒரு பை செய்து, இளவரசி துயிலும்பொழுது, அதை அவள் முதுகில் கட்டி வைத் தாள். அதில் நிறையக் கோதுமையைப் போட்டு, அடியில் ஒரு சிறு துவாரமும் செய்தாள். இளவரசி எங்கே சென்ருலும், பையிலிருந்து கோதுமை விழுந்துகொண் டிருக்கும் என்றும், அதைக் கொண்டு அவள் செல்லும் வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அரசியின் யோசனை.
இரவில் நாய் ம றுபடி வந்தது. இளவரசியை முதுகில் ஏற்றிக் கொண்டு, அது வேகமாகப் பாய்ந்து விடுதிக்குச் சென்றது. வழி யெங்கும் தானிய மணிகள் சிந்திக்கொண் டிருப்பதை அது அரியவிளை.
அன்றிரவு சிப்பாய் தானும் ஒர் இளவரசனுகிவிட்டால் இள வரசியை எளிதில் மணந்துகொள்ளலாம் என்று எண்ணமிட்டான். ஆளுல் மறுநாள் காலையில் அரசரும் அரசியும் இளவரசி சென்ற இடத்தை எளிதில் கண்டுபிடித்துவிட்டனர். சிப்பாய் சிறையில் அடைககபபடடான.
இருண்ட ஒர் அறையில் கிடங்து அவன் புழுங்கிக்கொண் டிருந்தான். நாட்கள் கழிந்துகொண் டிருந்தன. ஒரு நாள் காவலர் கள், கா8ள உன்னைத் துக்கிலிடப் போகிறர்கள்!' என்று தெரி வித்தனர்.