*78 அன்பு அலறுகிறது. காட்டு ஆண்மை இழந்த எனக்கும், அதல்ை இன்பத்தை இழந்து துன்பத்தையே துணையாகக் கொள்ளப்போகும் என் மனைவிக்கும் வழி காட்டு: нитбат தகுதியற்றவகிைவிட்டேன்! என்னுடைய மனைவிக்குக் கணவகையிருக்க கான் தகுதியற்ற வகிைவிட்டேன்! வழி காட்டு! கடவுளே எனக்கும் என் மனைவிக்கும் வழி காட்டு!” அட பாவமே, அருமை அத்தையிலிருந்து அசட்டு அத்தான் வரை அன்றிலிருந்து இன்றுவரை எனக்குத் தெரியாமல் மூடி மூடி வைத்த விஷயம் இதுதானே. இதுவேதானே? வெட்கக்கேடுதான்! - எது ஆண்மை? எது இன்பம்? எதை இழந்தால் மனிதன் ஆண்மையை இழக்கிருன்? எதை இழந்தால் மனிதன் இன்பத்தை இழக்கிருன்? ஐயோ, வீட்டையே புத்தகசாலையாக்கி வைத்துக் கொண்டிருக்கும் இவருக்குக் கேவலம் ஆண்மைக்கா அர்த்தம் தெரியவில்லை? இன்பத்துக்கா பொருள் இன்னதென்று விளங்கவில்லை? சீ சீ, தமிழ் இலக்கியமே இவரால் தற்கொலை செய்து கொண்டுவிடும் போலிருக்கிறதே! இவ்வாறு எண்ணி கான் வியந்துகொண்டிருந்த போது யாரோ ஒருவருடைய கை வந்து என் தோளின் மேல் விழுந்தது; திடுக்கிட்டுத் திரும்பினேன். இனம் தெரியவில்லை. கின்ற இடத்தைப் போலவே கிலை குலைந்த சிந்தையும் அப்போது இருட்டாயிருந்த தால்!
பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/80
Appearance