பக்கம்:அலைகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதழ்கள் O 267


பண்ணற துஷ்டத்தனமோ ஸஹிக்க முடியல்லே. அழ அடிக்கறதுகள், பண்றதைப் பண்ணிட்டு என்னைக் கண்டதும் சிட்டாப் பறக்கறதுகள். ஒடிப் பிடிக்கறதுன்னா உடம்பு முன் மாதிரியிருக்கா? என் உடம்பே என்னைச் சுமையா அழுத்தறது, போறாத்துக்கு சுமைதாங்கியாவுமா ஆயிட்டேன்.

"டே மரியாதையா என்கிட்டே பிடிபட்டூடு. ஒரு அடியாவது பட்டுக்கோ. என்னைக் கொட்டிக்கற வயத்தெரிச்சல் தீர"-ன்னு என் குழந்தைகளை வரம்கேக்கவேண்டி இருக்கு.

ஆத்திரம் கண் விளும்பிலே விண்விண்ணு தெறிச்சு வலிக்கிறது.

குமார் உடம்பை ஒடுக்கிண்டு அடிமேல் அடிவெச்சு நகந்து நகந்து கிட்ட வரான்.

அடிக்குத்தான் பயமோ என்னைக் கண்டுதான் பரிதாபமோ ரெண்டும் சேர்ந்து குழந்தை முகம் குழம்பறப்போ எனக்கும்தான் வயத்தை சங்கடம் பண்றது.

‘வா வந்தூடு..."

"ஒரு அடிதான் -" னு பேரம் பேசறான்.

“மரியாதையா வந்துாடு!”

"சொன்னாத்தான். ஒரே அடிதான். இல்லாட்டா வர மாட்டேன்"

"சரி வா"

ஆனால் அவன் கையிலே அகப்பட்டுண்டதும், இதுவரை பண்ணின குத்தம், பண்ணாத குத்தம். இனிமேல் பண்ணப் போற குத்தம், அவன்மேல் ஆத்திரம்-இன்னும் கைக்கு அகப்படாதவா மேலே ஆத்திரம், காம்பிலே இருக்கறவா மேலே ஆத்திரம் எல்லாமா ஒண்ணாச் சேர்ந்து பொங்கிவர வேகத்திலே பல்லைக் கடிச்சுண்டு ஒண்ணுக்கு நாலா இழுத்து வாங்கிடறேன்."வீல்" னு குழந்தை அலர்றான். அந்த அபயக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/269&oldid=1287227" இலிருந்து மீள்விக்கப்பட்டது