பக்கம்:அலைகள்.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதழ்கள் இ 287

பண்ணற துஷ்டத்தனமோ ஸ்ஹிக்க முடியல்லே. அழ அடிக்கறதுகள், பண்றதைப் பண்ணிட்டு என்னைக் கண்ட தும் சிட்டாப் பறக்கறதுகள். ஒடிப் பிடிக்கறதுன்னா உடம்பு முன் மாதிரியிருக்கா? என் உடம்பே என்னைச் சுமையா அழுத்தறது, போறாத்துக்கு சுமைதாங்கியாவுமா ஆயிட் டேன்.

‘டே மரியாதையா என்கிட்டே பிடிபட்டுடு. ஒரு அடி யாவது பட்டுக்கோ. என்னைக் கொட்டிக்கற வயத்தெரிச்சல் தீர'-ன்னு என் குழந்தைகளை வரம்கேக்கவேண்டி இருக்கு.

ஆத்திரம் கண் விளும்பிலே விண்விண்ணு தெறிச்சு வலிக்கிறது.

குமார் உடம்பை ஒடுக்கிண்டு அடிமேல் அடிவெச்சு நகந்து நகந்து கிட்ட வரான்.

அடிக்குத்தான் பயமோ என்னைக் கண்டுதான் பரிதா பமோ ரெண்டும் சேர்ந்து குழந்தை முகம் குழம்பறப்போ எனக்கும்தான் வயத்தை சங்கடம் பண்றது.

‘வா வந்துTடு...’ , ஒரு அடிதான் -'லு பேரம் பேசறான்.

“மரியாதையா வந்துாடு!”

சொன்னாத்தான். ஒரே அடிதான். இல்லாட்டா வர மாட்டேன்’

  • @”

ஆனால் அவன் கையிலே அகப்பட்டுண்டதும், இதுவரை பண்ணின குத்தம், பண்ணாத குத்தம். இனிமேல் பண்ணப் போற குத்தம், அவன்மேல் ஆத்திரம்-இன்னும் கைக்கு அகப் படாதவா மேலே ஆத்திரம், காம்பிலே இருக்கறவா மேலே ஆத்திரம் எல்லாமா ஒண்ணாச் சேர்ந்து பொங்கிவர வேகத் திலே பல்லைக் கடிச்சுண்டு ஒண்ணுக்கு நாலா இழுத்து வாங் கிட றேன். வீல்'னு குழந்தை அலர்றான். அந்த அபயக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/269&oldid=667107" இருந்து மீள்விக்கப்பட்டது