உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118 O லா. ச. ராமாமிருதம்


கொண்டு போய்விட்டான்! பட்பட்பட்- மோட்டார் சைகிள் சப்தம் உனக்குக் கேட்கவில்லை?

மார்பைத் துளைத்த வலிகூட மறந்து நின்றேன். ஆம், நினைவில் அல்ல. மெய்யாவே வெடி சப்தம் தூர இருந்து எட்டுகிறது. நினைவும் நனவும் இழைந்த சமயமே தெரியவில்லை. இந்தப் பக்கமாய்த்தான் நெருங்குகிறது.

புரிந்தது. அம்பிப்பயல், புதுவண்டி மோகத்தில் சவாரி பழகிக் கொண்டிருக்கிறான். அபிதாவுக்குத் தன் வரிசைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறான். கண்மூடி வேகத்தில் வருகிறான்.

ஆனால் என் கண்கள் இவனைப் பார்ப்பதற்கு இல்லை. அவன் பின்னால் கூந்தலும் ஆடையும் குலைந்து, காற்றில் மேலாக்குச் சிறகாட, முகத்தில் வேகவெறி கூத்தாடிக்கொண்டு-

அடுத்தகணம் என்ன நேர்ந்ததென்று விளக்கமாய் அப்போது தெரியவில்லை. பின்னால் எண்ணியெண்ணி நெஞ்சுத் தழும்பில், நினைவின் செதுக்கலில் அவயவம் அவயவமாய் பிதுங்கி நிற்கிறது.

மலையடியில் நந்தியா, நாயா தெரியாமல் குறைச்செதுக்கலில் விட்டு நின்ற கல்லின் மொத்தாகாரத்தில் சைகிள் பெரும் சத்தத்துடன் மோதிற்று (அதைத் தன் வழி விட்டுத் தகர்த்து எறிந்துவிட வேண்டும் என்று அம்பிப் பயலுக்கு எண்ணமோ என்னவோ?) மோதிய வேகத்தில் பந்தாய் ஆள் உயரம் எகிறி பொத்தென்று பூமியில் விழுந்தது, அவன் ஒரு மூலை, அபிதா ஒரு மூலை-

- இல்லை, என் கண்கள் அபிதாவைப் பார்க்கத்தான்.

அர்ச்சனையில், அர்ச்சகன் கையினின்று ஆண்டவன் பாதகமலங்களை நோக்கிப் புறப்பட்ட மலர்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/124&oldid=1128064" இலிருந்து மீள்விக்கப்பட்டது