உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 69

ஒன்றின் மேல் விழுந்து விட்டால், தொடல் என்பது ஏன் அவ்வளவு அவசியமாகி விடுகிறது?

தொடல்.
உடைமையின் முத்திரை.
உறவின் வழித் துணை.

உணர்வின் பழி ரேகைக்கு ரேகை பாயும் மந்திர சக்தி என்ன?

அவள் கொடுத்த ஜலம் தொண்டை அடியில் உவர்த்தது. அந்தக் கிணற்று ஜலம் கற்கண்டாய்த் தித்திக்குமே இதற்கு இந்த உவர்ப்பு எப்படி வந்தது? ஒரு வேளை என் தாபம்தான் கொடுமையோ?

சக்கு, நீ சாகவில்லை. உன்னையே பலிகொடுத்து என்னை வாங்கும் பழியைக் கரடிமலைக் கருவேலநாதனிடம் வரமாக வாங்கிக் கொண்டாயா?

நீ வாங்கும் பழி இவ்வளவு பயங்கரமா?

சக்கு என்னால் தாங்க முடியல்லேடி சக்கு என்னை மன்னிச்சூடடி!

மன்னிப்பு.

இது ஒரு பெரும் பொய். மன்னித்ததால், தீங்கின் பங்கு குறைந்து விடுமா? வேதனையிலிருந்து விடுதலை கிடைத்துவிடுமா? நினைவால் இன்னும் கூடுதலேயன்றி குறைவு ஏது? மார் வெடிக்க அழுகை பீறிடுகிறது.

அபிதாவுக்குக் கேட்டு விட்டால்?

கேட்டு விட்டதா?

பயந்து சுற்றுமுற்றும் பார்க்கிறேன். திண்ணையில் உட்கார்ந்திருக்கிறேன். இங்கு எப்போ வந்தேன்? வந்ததும் நல்லதுதான். என் அழுகை அவளுக்குத் தெரியாது அல்லவா? கரையோரம் ஜலம் பருகிக் கொண்டிருக்கும் விலங்குக்குக் கால் சறுக்கிவிட்டாற்போல், வெட்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/75&oldid=1130503" இலிருந்து மீள்விக்கப்பட்டது