பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 (மேளதாளங்களின் ஒலி கேட்கின்றது. டெல் எழுந்து கிற்கின்றன். ஒரு கல்யாண ஊர் வலம் வருகின்றது. கூட வந்துகொண்டிருந்த ஸ்டஸ்ஸி என்பவன் மட்டும் விலகி டெல்லின் பக்கம் போகின்ருன். ஊர்வலம் தொடர்ந்து செல்கின்றது.) tடஸ்ஸி: நல்ல பணக்காரக் குடியானவன். கல்யாணப் பெண்ணை அழைத்துப் போகிருன். அதோ பக்கத்து ஊரில் இன்று வந்தவர்களுக்கெல்லாம் சாப்பாடு. அழைப்பே வேண்டாம். யாரும் வரலாம். நீங்களும் வாருங்களேன்! |டல் : உற்சாகமான இடம் துக்கப்படுகிறவனுக்குப் பொருந் தாது. தயவு செய்து நீங்கள் போங்கள் ! i (ஆரம்கதை பல குழந்தைகளே அழைத்துக் கொண்டு வந்து பாதையை மறித்து கின்று கொள்கிருள்.) tடஸ்ஸி : யாரம்மா நீ? இப்படி வழிமறித்து நிற்கிருயே! ஆரம்கதை : இங்கே அவர் என்னைத் தாண்டிச் செல்ல முடியாது! அவரைக் கண்டு நான் நேரில் மன்ருட வேண்டும்! ஸ்டஸ்ஸி எவரை ? ஆரம்கதை : கவர்னரை! ஸ்டஸ்ஸி: (டெல்லிடம்) நீங்கள் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலிருக்கிறது. நான் போகிறேன், வந்தனம் ! (போகிருன்.) (பிரிஷார்ட் அவசரமாக ஓடிவருகிருன்.) விஷார்ட் : வழியைவிட்டு ஒதுங்குங்கள்! மேன்மை தங்கிய கவர்னர்துரை வருகிருர்! (டெல் வேகமாக வெளியேறுகிருன். ஜெஸ்ல ரும் ருடோல்பும் குதிரைகள்மீது அமர்ந்து வருகின்றனர்.) ஜேஸ்லர்: நீ என்ன சொன்னுலும் சரி, நான் சக்கரவர்த்தி யின் ஊழியன், அவர் மனப்படி நடப்பதே என் முதல் கடமை. என்னை இங்கே எதற்காக அனுப்பி வைத்தார்? அ-6