உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{rh||5|}

 குவோனி: அதுவா? வில்லியம் டெல்! பர்க்லன் கிராமத்து வீரன் டெல் வருகிறான் !

                              (வில்லியம் டெல் வருகிறான்.)                                                                                டெல்: என்ன விஷயம்? (கோன்ராடைப் பார்த்து) இவன் ஏன்

இப்படி நடுங்கி நிற்கிறான்? குவோனி: இவன் அல்ஜெல்லனைச் சேர்ந்த கோன்ராடு, இங்கு நடக்கும் ஆஸ்திரியாவின் கொடுங்கோல் ஆட்சியில், ஆஸ்திரிய நீதிபதி இவன் மனைவியை மானபங்கப்படுத்த முயன்றார். இவன் கோடரியைக் கொண்டு ஒரே வெட்டில் அவர் தலையைப் பிளந்து வெட்டிப் போட்டு விட்டு வந்திருக்கிருன். ஒரு விநாடியில் இவன் இங்கிருந்து தப்பவேண்டும். புயலுக்கு அஞ்சிக் கோழை ருவோடி 'ஒடம் விடமாட்டேன்' என்கிறான் ! டெல்: கோன்ராடு, நீ மானமுள்ளவன்! கடவுள் மீது பாரத் தைப் போட்டுவிட்டுக் கிளம்பு! ஏறு ஒடத்தில்! நான் ஒட்டுகிறேன்! இங்கே தங்கி மனிதர்கள் கையில் அகப்படுவதை விட, ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவது மேல் கோன்ராடு : நீ மனிதனல்ல, அப்பா, தேவதூதன்! என்னைக் காப்பாற்ற ஆண்டவன்தான் இந்த வேளையில் உன்னை அனுப்பியுள்ளான் டெல் : சரி கிளம்பு! வருவது வரட்டும்! குவோனி, ஏரியில் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், என் மனைவிக்கு ஆறுதல் சொல்லு இந்த நிலைமையில் நான் பேசாமல் வீட்டுக்குப் போக முடியாது !

(கோன்ராடு ஒடத்தில் அமர, டெல் துடுப்புப் பிடித்து ஒடத்தைச் செலுத்துகிறான். ஒடம் ஒரே பாய்ச்சலாகக் கிளம்பிச் செல்கிறது.)

குவோனி : நல்ல ஒடக்காரன்தான் நீ! வேட்டைக்காரன் டெல் ஒட்டுகிற படகைப் பரம்பரைப் பரிசலோட்டி, நீ, ஓட்ட முடியாதாக்கும்! ருவோடி : என்னைவிட வீரமுள்ளவன்கூட டெல் செய்வதைச் செய்ய முடியாது! இந்தப் பக்கத்தில் டெல்லுக்கு இணை யான வீரன் டெல்தான் ! வெர்னி : (பாறைகளில் ஏறிக்கொண்டு) குவோணி-ஐயையோ, படகு நீருள் மூழ்கிவிட்டதே! இல்லை, இல்லை, அதோ