29
மாலை ஆறு மணிக்கு இளவரசியின் மாளிகையில் மன்னரும், இராணியும், மந்திரிகள் முதலியோரும் ஆயத்தமாகக் காத்திருந்தனர். வாலிபன் வந்ததும், அவர்கள் அனைவரும் மிகுந்த மரியாதையுடன் அவனை வரவேற்றனர்.
எல்லோரும் தேநீர் அருந்திய பின், அரசி, அவன் ஒரு கதை சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். 'கதை ஆழ்ந்த கருத்தும் உயர்ந்த நீதியும் கொண்டிருத்தல் நலம் என்று அவள் கூறினாள்.
'நாங்கள் சிரித்து மகிழும்படியாகவும் இருக்கட்டும்!' என்று சொன்னார் அரசர்.
'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லி, இளைஞன் மூன்று முறை தொண்டையைக் கனைத்துக்கொண்டு கதை சொல்லத் தொடங்கினான்:
'ஒரு வீட்டுச் சமையலறையில் ஒரு கட்டுத் திக்குச்சிகள் இருந்தன. அவைகள் தாங்கள் உயர்ந்த வமிசத்தில் பிறந்தவர்கள் என்ற பெருமையால் தலைகிறங்கி யிருந்தன. தாங்கள் ஒரு மெல்லிய தேவதாரு மரத்தின் குச்சிகள் என்பதுதான் அவைகளின் தலைக்கனத்திற்குக் காரணம். அந்த மரம் வெட்டப்படுகையில், அடிமரம் கப்பல் கட்டுவதற்காகக் கொண்டு போகப்பட்டது; கிளைகள் வேறு பல வேலைகளுக்குப் பயன்பட்டன. மென்மையான பகுதிகள் தீக்குச்சிகளாகச் செதுக்கப்பட்டன. அவைகள் இப்பொழுது இருக்கும் இடம் சமையலறை; ஆயினும் தங்கள் பழம் பெருமையைக் கூறு வதில் அவைகள் சலிப்படைவதேயில்லை. எப்பொழுது பேசிலுைம், "அந்தக் காலத்திலே நாங்கள்" என்றுதான் அவைகள் தம்பட்டம் அடிக்கும். ஒரு நாள் மாலையில் அவை தங்கள் பழம் பெருமையைச் சொல்லிவிட்டு, இருளை ஒட்டுவதற்கு நாங்கள் இல்லாமல் முடியாது!' என்று பேசின.
இதைக் கேட்ட இரும்புச் சட்டி, இந்த வீட்டிலேயே நான் தான் முதன்மையானவள். எதை வதக்க வேண்டுமானலும், பொரிக்க வேண்டுமானுலும் என்னைத்தான் எடுப்பார்கள். நான் இல்லாமல் உணவே தயாராக முடியாது. வீட்டில் சாப்பாடு முடிந்ததும், என்னைக் கழுவி அலமாரியிலே வைத்துவிடுவார்கள். பிறகு நான் நண்பர்களுடன் கதை பேசிக் கொண்டிருப்பேன். என்னுடன் சேர்ந்தவர்களில் வாளிமட்டும் இடையிடையே வெளியே போய்வரும். நான் 1779–4