பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L·A._ திருத்தணிகேசர் துணை ' அருணகிரிப் பெயர் வள்ளல் சொன்ன திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் துரளி என் சென்னியதே ' திருத்தணிகை யாண்டவரது தனிப்பெருந் தொண்ட ராம் நீ அருணகிரிநாத சுவாமிகளது சரித்திரம் கர்ணபரம் பரையாகப் பலவேறு வகையாகக் கூறப்பட்டு வருகின் றது. புலவர் புராணம் பாடிய பூரீ முருகதாச சுவாமிகள் முதல் பல அடியார்கள் அருணகிரியாரின் சரித்திரத்தைத் தாம் கேட்டவாறும், தமது உள்ளத்தில் இறைவன் இயக்கிய வாறும் எழுதியுள்ளார்கள். 2ɔ :5 stares, te ?- ாசித்திரம் இதுதான் என்று திடம்பெற உரைக்க இடந்தரவில்லை. கர்ண பரம்ப ரைச் சேதிகளை அறிய விரும்புவோர் மேற்சொன்ன நூல் களைப் படித்து உணரலாம். இப்பொழுது யான் எழுதி யுள்ள இவ்வரலாறு கூடியவரையில் அகச்சான்று, புறச்சான் றுகளைக் கொண்டே சுவாமிகளது சரித்திரத்தைக் கூறுவதா கும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் எனப்படும் மூவர் சரித்தி ரத்தை எங்ங்னம் தேவாரக் குறிப்புக்களைக் கொண்டு சேக்கி மார் சுவாமிகள் கூறியுள்ளனரோ அங்ங்னமே சுவாமிகளின் திருப்புகழாதிய நூல்களின் குறிப்புக்களைக் கொண்டு அவ ர து தல யாத்திரையாதிய வரலாற்றை எழுதவேண்டும் என் பது எனது அவா. ஆல்ை, அச்சேறியுள்ள திருப்புகழ்ப் பாக்கள் எல்லாம் சுவாமிகளது திருவாக்கே என உறுதியு டன் கூறுதற்கு இயலாமையானும், மாயா பாசங்களில் தாம் படாதபோதினும், உலகுக்கு நன்மை யூட்டவேண்டித் தாம் அத்தகைய பாசங்களிற் பட்டதாகத் தமிழ்ப் புலவர் பெருமக் கள் எடுத்துக் கூறும் பெரு வழக்கு உண்மையானும், சிற்சில அகச் சான்றுகளைக் கூடச் சுவாமிகளின் வாழ்க்கைச் சான்மு கக் கூறுதற்கு அஞ்சி விடுத்துள்ளேன். உதாரணமாக (1) எங்கள் திருப்புகழ்ப் பதிப்பில் 392-ஆம் பாடலில் மனைய