பக்கம்:அவள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோடு 121

கிழவர் புன்னகை புரிந்தார். வேறு பதில் பேசவில்லை. அவளுக்கு எரிச்சலாக வந்தது. வெடுக்கென்று அவர் மடியிலிருந்து பிடுங்குவதுபோல் குழந்தையைத் தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

இன்று ராத் தங்க ஒழுங்கையில் இடம் கொடுத்தால் போதும். பாய், படுக்கை எதுவும் வேண்டாம். பழக்கமில்லை. வாசற்கதவைப் பூட்ட வேண்டாம் ஓரிருமுறை இரவில் எழுந்திருக்க நேரிடலாம்.

ஆனால், ஜல உபாதைக்கு இருமுறை அவன்தான் எழுந்தான். முதல் தடவை அவர் மல்லாந்து நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்.

இரண்டாம் முறை, அவன் வாசலுக்கு வந்தபோது அவர் இல்லை.

***

வீல் என்று அலறல் கேட்டு, கிரிஜா அலறிப்புடைத்தாள். மூவரும் கூடத்தில்தான் மின்விசிறி அடியில் படுக்கை. நன்கு விடிந்திருந்தது.

வாசலைப் பார்த்த கூடத்து ஜன்னலை அவன் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு வாய் ஏதோ குழறிற்று. அவன் விழி வட்டங்கள் போன வழி அவள் பார்வை சென்றது.

ஜன்னல் சுவர்க்கட்டையில் ஒரு சாக்கலேட்.

ஒரு ஜோடி சிவப்புக்கல் தோடுகள் சிரித்துக்கொண்டு இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/165&oldid=1497045" இலிருந்து மீள்விக்கப்பட்டது