இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விந்தன் 97 என் அன்பே' என்று கதைகளில் வரும் கதா காயகிகளைப்போல கானும கண்களைக் கவிழ்த்து, முகத்தைச் சாய்த்து அவருக்கு முன் ல்ை கின்றேன்.
- ஐயோ, என் ஆசை'லலிதா! இந்தப் பார்வைக்கே என் கற்பனை சாம்ராஜ்யத்தையே கான் உன்னு டைய பாதாரவிந்தங்களில் வைத்து வணங்கலாமே!’ என்று வெய்யிலில் நிற்கும் பைரவரைப்போல காக்கை வெளியே நீட்டினர் அவர்.
- அவ்வளவு அழகாயிருக்கிறேனு நான் ’’’ இப்படி நான் கேட்டுவைத்ததுதான் தாமதம்-என்ன சொல் வேன், போங்கள்!-வானத்துக்கும் பூமிக்குமாக ஒரு துள்ளுத் துள்ளி, என்ன வார்த்தை இது?-இந்த வார்த்தை என்னைக் கொல்லுகிறது லலிதா, இந்த வார்த்தை என்னைக் கொல்லுகிறது!-ஐயோ, கான் என்ன செய்வேன்? எப்படி உன் அழகை வர்ணிப் பேன்!-வேண்டுமானல் உள்ளே போய்க்கண்ணுடியை
எடுத்துக்கொண்டு வரட்டுமா? -உன்னுடைய அழகை நீயே பார்த்துப் பரவசப்படு, நீயே பார்த்துப் பரவசப்படு!” என்று சொல்லிக்கொண்டே அவர் மாடியை நோக்கி ஓடினர். அதே சமயத்தில் புழக்கடை மதிற்கவருக்குமேல் என் அத்தானின் தலை தெரியவே, என்னை விட்டு விட்டு எங்கே போகிறீர்கள்? எனக்குப் பயமாக இருக்கிறது!’ என்று கூவினேன் கான். இதைக் கேட்டதும் சர்வக்ஞனகவே ரீ லங்கேஸ்வரன் மாறி விட்டார்.