பக்கம்:அலைகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264 O லா ச. ராமாமிருதம்


சுபாவமாப் போச்சு. ஆகாயத்துலே கயத்தைக் கட்டி அதன் மேலே கண்ணைக் கட்டி நடந்து நடந்து.

ஆனால் ஜகதாவுக்கு என்னவோ கோபம் வல்லே.

“இந்தக் குழந்தைகளை வெச்சுண்டு, இந்தத் தடவை எப்படி சமாளிக்கறதுன்னு வந்துட்டேன். அவாளும் பெரிய காம்பிலே போறா, திரும்பி வரதுக்கு நாலு அஞ்சு மாஸமாவது ஆகுமாம்."

"அதற்காக?"

ஜகதாவின் முகத்திலே கோடி அசதி கொடி படர்ந்தது.

“நான் என்னப்பா பண்றது?”

“அப்படின்னா? அவர் நிஜமாவே திகைச்சு நின்றார்.

எதையோ தேடறாப் போலே சுற்றுமுற்றும் பார்த்துட்டு ஜகதா எழுந்திருந்து விருக்குனு தோட்டத்துக்குள் போனாள். அப்பா, புளியங்கொட்டை மாதிரியிருந்தவள் எப்படிப் பூசணிக்காயா மாறிட்டா : கூடத்திலிருந்தே தோட்டத்தில் ஒவ்வொரு செடி கொடி மரமும் நன்னாத் தெரியும். ஜகதா சரசரன்னு நேரே போய் பவழமல்வி மரத்தைப் பிடிச்சு உலுக்கினாள். பொலபொலன்னு பூக்கள் அவள் மேலும் கீழேயும் உதிர்ந்தன. ஜகதா நேரே திரும்பி வந்து நடுக்கூடத்தில் எங்களைப் பார்த்துண்டு புன்னகை பூத்துண்டு பேசாமே நின்னா. அவள் தலையிலும் தோளிலும் புடவை மேலும் பூக்கள் ஒட்டிண்டிருந்ததுகள். அவள் முகத்திலே சிவப்பும் வெளுப்பும் வர்ணச் சாந்தாக் குழைஞ்சு "டால்" அடிச்சது. அந்த முகத்திலே வெட்கமும் அர்த்தமும் சந்தனம் மாதிரி கம்முனு கமாளிக்கது. எப்படியிருந்தாலும் என் ஜகதீசுவரி அழகு அழகுதான். அழகை என்ன தான் அழிச்சாலும் அழிச்சூட முடியுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/266&oldid=1286540" இலிருந்து மீள்விக்கப்பட்டது