பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அன்பு அலறுகிறது திருக்கக் கூடாதா? வசைபாடாமல் இருந்திருக்கக் கூடாதா? வாம்மா, வா!' என்று வாய் கிறைய அழைக்க வேண்டாம் மாமா; மனம் கிறைய வாழ்த்த வேண்டாம் மாமா; கர்மம், கர்மம்' எனக் காறித் துப்பாமல் இருந்திருக்கக் கூடாதா? விதிவிதி' என்று தலையில் அடித்துக் கொள்ளாமல் இருந்திருக்கக் கூடாதா? இவர்கள்தான் பெரியவர்கள்; என்ன காரணத் தாலோ என்னை வெறுக்கிருர்கள். அந்தக் குழந்தை லகூடிமியாவது என்னைக் கண்டதும் அக்கா!' என்று ஒடி வரலாமல்லவா? ஆர்வத்தோடு என் கைகளைப் பற்றி, ஏன் அக்கா, எனக்கு என்ன வாங்கிக் கொண்டு வந்திருக்கிருய்?’ என்று குதிக்கலாமல்லவா? என் கையிலிருக்கும் பையிலுள்ள பழங்களையும், பண்டங் களையும் எடுத்துத் தின்னலாமல்லவா? உஹாம். அதுவும் முகத்தை உம்' என்று வைத்துக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தது. அதையும் பொருட்படுத்தாமல், இங்கே வா, லசல்டிமி' என்று துக்கம தொண்டையை அடைகக நான் அவளை அழைத்தேன். வயமாத்தேன், போ!' என்று தன் மழலைச் சொற்களால் அவள் மனத்தைக் குத்தினுள்.

  • உன் அக்கா உனக்குமா வேண்டாதவளாகி விட்டாள்!" என்றேன் கான் கண்களில் நீர் துளிக்க.

ஹோக்கும்; அக்காளாம் அக்கா! அம்மாவுக்குப் பிடிக்காத அக்கா எனக்கு மட்டும்’ பிடிக்குமாக்கும்