உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

ஓர் ஆராய்ச்சி நூலகத்திலே குறிப்பிடத்தக்க அளவுக்கு இந்திய நூல்களும் கையெழுத்துச் சுவடிகளும் உள்ளன.

பென்சில்வேனியாவிலிருக்கும் மாநில ஆசிரியர் கல்லூரியிலுள்ள டாக்டர். இ. ஆர். சிமிடி என்பவர் இந்திய நூல்களைப்பற்றிக் கணக்கெடுத்துவிட்டுக் கீழ் வருமாறு கூறுகிறார்.

"இந்திய நாட்டு நூல்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் வளர்ந்து வந்தபோதிலும் அமெரிக்காவிலுள்ள சீன, சப்பான் நூல்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவே".