பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அறநூல் தந்த அறிவாளர்


கினார் அந்நாளில் மீனாட்சியம்மைமீது குறம், இரட்டை மணிமாலை முதலிய நூல் களைப்பாடினார். அரச காரியங்களில் ஈடுபட்டிருந்த மன்னர் ஒரு நாள் காலந்தாழ்த்து உணவு கொள்வதைக் குமரகுருபரர் கண்டார். அப்போது மன்னரை நோக்கித் திருக்குறட் பாடல் ஒன்றைச் சொன்னார்.

‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’

என்பது அக்குறள். இதனைக் குமரகுருபரர் கூறியவுடன் அரசர். ‘பாட்டின் பொருள் என்ன? என்று கேட்டார். ‘கோடிக்கணக்கான செல்வத்தைத் தேடி வைத்தாலும் கடவுள் வகுத்த வழியில்தான் அதனை அனுபவிக்க முடியுமே அல்லாமல் தாம் விரும்பிய வாறு அனுபவிக்க ஒருவராலும் முடியாது என்று குமரகுருபரர் அதன் பொருளை விளக்கினார்.

அறநூல் பாடுவதற்கு அரசன் வேண்டுதல்

பாட்டின் பொருளைக் கேட்டுத் தெரிந்த திருமலைநாயக்கர், “இப்பாடல் எந்த நூலில் உள்ளது?' என்று வினவினார். குமரகுருபரர். இது ‘திருக்குறள் நூலில் உள்ள ஒரு குறள்’ என்றார். இதைப் போன்று அந்த நூலில்