பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/134



சென்னையிலிருந்து முல்லை ப. முத்தையா அவர்கள் நூறு இரசீதுப்புத்தகங்கள் (ஒவ்வொன்றும் நூறு இரசீதுகள் அடங்கியது) நன்கொடையாக அனுப்பி வைத்தார். குடியரசு முதலீய எல்லாச் செய்திதாள்களுக்கும் நிதி வேண்டுகோள் அனுப்பிவைத்தேன். தமிழகமெங்கும், பல நகரங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும், மற்றும் இலங்கை சிங்கப்பூர் முதலிய நகரங்களிலிருந்தும் இரசீதுப் புத்தகங்கள் அனுப்பிவைக்கும்படி கடிதங்கள் வந்தன. அவ்வாறே எல்லா ஊர்களுக்கும் அனுப்பிவைத்தேன். சில ஊர்களுக்கு நானே நிதிவசூலுக்குச் சென்றிருந்தேன், வெளியூர்களிலிருந்து பணவிடையில் வரும் பணத்தை வாங்கிக் கா.கருப்பணன் அவர்கள் பாரதிதாசன் நிதிக்கணக்கில் வங்கியில் போட்டுவைப்பார்.

பெரியார் ஈ.வே. ரா. அவர்களிடமிருந்து என் பெயருக்கு 15-6-45 ஆம் நாள் ரூ. 352/-க்கு காசோலை ஒன்று வந்தது. அக்காசோலையோடு கீழ்க்கண்டவாறு ஒரு குறிப்பும் வந்தது.

பெரியார் ஈ. வே.ரா. நன்கொடை
ரூ.150 00
திரு. மத்திரன் அவர்கள் (திண்டுக்கல்)
ரூ.101 00

திரு.ஜீ. இலக்ஷுமணன் (கல்வார்ப்பட்டி)

ரூ.101 00

ஆக ரூ. 352 00

திரு. மத்திரன் அவர்களும், திரு இலக்ஷுமணன் அவர்களும் பெரியாா் பெயருக்கு நன்கொடைகளை அனுப்பி வைத்த காரணத்தால், பெரியார் அவர்கள் தமது தொகையையும் சேர்த்து அனுப்பி வைத்தார்.

இராசிபுரம் 'பாரதிதாசன் நிதி நாடகக் குழுவினர்’ காலஞ்சென்ற சலகை ப. கண்ணன் அவர்களால் தீட்டப்பட்ட 'வீரவாலி' நாடகத்தை நடத்தி, அதன்மூலம் வசூலான ரூபாய் 1084ஐயும், பாவேந்தர் அவர்களிடமே 22-11-45 ஆம்நாள் கொடுத்தனர். அதன்பின்னர் என்