பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி H27 (w) அறிவை அறியும் தத்துவத்தையும் அபரிமித வித்தைகளையும் அருணகிரியார்க்கு அறுமுகப்பரமன் அரு களிய தலங்கள் ஐந்தினிலொன்று திருத்தணிகை. அழகிய செருத்தணியில் அறிவை அறிதத்துவமும் அபரிமித வித் தைகளும் அறியென...வாழ்வித்த வேதியனும், வேடிச்சி கா வலனே (பக்கம் 38, 57 பார்க்க). (vi) ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு சுவாமிகள் 'திருப்புகழ் ஒதுங் கருத்தினர் சேரும் திருத்தணி (259) என் றதன் உண்மையை இப்போது திருத்தணிகையில் வருடம் தோறுங் காண்கின்ருேம். எனது தமையனுர் வ. சு. சண் முகம் பிள்ளை அவர்கள் 1912u° முதல் ஜனவரி முதல் தேதி தோறும் தணிகை நாயகரைத் தரிசித்து அநுட்டித்து வந்த வழக்கத்தை அவர்கள் மூலமாய் வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமி சச்சிதானந்தா அவர்கள் 1917 இடு டிசம்பர் 31வ. முதல் ஆர்வத்துடன் மேற்கொண்டு 1921u° முதல் வருடந் தோறும் தமது அடியார்களுடன் டிசம்பர் 31 தேதியில் வந்து திருப்புகழ் பாடி அவ்வழக்கத்தை விருத்தி செய்தார். (பக்கம் 75.பார்க்க). இவ்வழக்கம் வருடம் செல்லச் செல்லப் பிரபலம் ஏறி இப்போழுது பெரிய உற்சவம் போலப் பலதலத்து அன்பர்தம் பெருந்திரட் கூட்டமுடன் நடைபெறுகின்றது. வருவடி இறுதி நாளில் (டிசம்பர் 31வ) இரவு தணிகையில் ஒன்று கூடி நடைபெறும் திருப்புகழ்ப் பஜனைக்காட்சி சிவ லோகம் எனப் பரிவேறு திருத்தணிகையை உண்மை யாகவே சிவலோகமெனப் பொலியச் செய்கின்றது. (vii) திருத்தணிகைக்கு உரிய இருமலுரோக என் னும் (260) பாடல் எவ்வித நோயும் நம்மைப் பீடியாதிருப்ப தற்கும், வினைக்கீடான நோய் வந்தால் அந்நோயின் கொடு மையைத் தணிப்பதற்கும் சிறந்த மந்திரத் திருப்புகழாம்" என்பது பக்தர்கள் இன்றும் அநுபவத்திற் கண்டதொரு காட்சியாகும்.