பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சேற்றில் மனிதர்கள் அடுப்பில் கள்ளியைப் பார்த்து எரியவிட்டு எருமுட்டை யை வைத்துவிட்டு உலையை ஏற்றி வைக்கிறாள். புகை நடுவிட்டுக்குள் பரவுகிறது. 'அரிசியக் கழுவிப்போடு, நா வாரேன்." வெளியே ருக்குமணியும் பாக்கியமும் வீச்சு வீச்சென்று விறகுச் சண்டை போடுகிறார்கள். ஒருவர் சொத்தை மற்றவர் அபகரித்ததாக வாயால் அடித்துக் கொள்வது வழக்கமான சமாசாரம். கோதண்டமும் அம்மா சியும் பொழுதுடன் குடித்துவிட்டுத் திரும்புகிறார்கள். கள்வாடை கப்பென்று மூக்கைப் பிடிக்கிறது. ஆற்றங்கரை மேட்டோடு கூடடையும் பறவையினங்கள் போல் சேரி மக்கள் விரைந்து திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். புளியமரமும், உடைமரமும், இருளோடு இருளாக மைக்கொத்தாக அப்பியிருக்கின்றன. மதகடி வரும்வரையிலும் வெளிச்சம் கிடையாது. சைக்கிள் கடையில் இளவட்டங்களின் கும்மாளம். காலரைத் துரக்கிவிட்டுக் கொண்டும், முடியை ஸ்டைலாக வைத்துக்கொண்டும் கவலையற்ற கேலியிலும் கிண்டலிலும் சிரிப்பிலும் காலம்கழிக்கும் இளசுகள். விருத்தாசலம் பிள்ளையின் மகன் துரை, தையல் கடை பக்கிரியின் தம்பி, வஸ்தாது, மூலை ரங்கனின் இரண்டு வாரிசுகள் ஆகிய முக்கியமான இளவட்டங் கள் கண்களில் படுகின்றனர். இங்கே கோபு இல்லை. வீரமங்கலம் சினிமாக் கொட்டகையில் புதிதாக வந்திருக்கும் சினிமா விளம்பரத் தட்டி பெரிதாகக் கடையின் இருபுறங்களிலும் அணிசெய்கின்றன. அதில் பிறந்த குழந்தைக்குப் போடக்கூடிய அரைக்கச்சுடன் ஒரு பெண் காலைத் துக்கிக் கொண்டிருப்பதும், இந்தப் பிள்ளைகளைப் போல ஒரு இளக குனிந்து அவளைப் பார்ப்பதுமாக இருக்கின்றனர். 'துரத்தேறி என்று துப்பத் தோன்றுகிறது. மறுநாளைய நடவு, உழவு பற்றிய விவரங்களுடன் நாட்டாமைகள் சூழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் அவர்களுடைய சங்கக் கொடியுடன் இருக்கும் கீற்றுக் கொட்டகையில் மொய்த்திருக்கிறார்கள். குப்பன், ஐயனார் குளத்துச் சங்கதிகளைப் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று தோன்றுகிறது. கிட்டம்மாளும் அங்கே நிற்கிறாள். கிட்டம்மாள்