பக்கம்:மதன கல்யாணி-1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 மதன கல்யாணி

கூச்சலிட்டுக் கூத்தாடி ஆரவாரம் செய்ய கடைசியில் லாந்தர் கைத் தடிகளோடு இரண்டு மனிதர்கள் கதவின் உட்புறத்தில் தோன்றி மிகவும் அஞ்சிய பார்வையாக வெளியில் நின்றோரைப் பார்த்து, “யாரையா அது? நடு இரவில் வந்து ஏனையா இப்படிக் கூச்ச லிடுகிறீர்கள்?” என்று அதட்டி வினவ, அதைக் கேட்ட சிவஞான முதலியார், மிகவும் நயமான குரலில் அவர்களை விளித்து, “யாரப்பா அது? இப்படிக் கொஞ்சம் வாருங்கள்; நேற்று திருடர்கள் வந்தபடியால், இந்த அகாலத்தில் இருளில் நாங்கள் வந்தது உங்களுக்கு சந்தேககரமாய் இருப்பது இயற்கை தான்; திருடர்களாய் இருந்தால், மதில் மேல் ஏறி இந்நேரம் உள்ளே வந்திருப்பார்கள் அல்லவா வெளிக்கதவை நீங்கள் திறந்து விடுகிற வரையில் கூச்சலிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். நாங்கள் இவ்வளவு அதிகமாகக் கூச்சலிட்டு உங்களை அழைத்ததில் இருந்தே, நாங்கள் வித்தியாசமான மனிதர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் கொஞ்சமும் யோசனை செய்ய வேண்டாம். நாங்கள் தக்க மனிதர்கள். ஒரு முக்கியமான சங்கதியைப் பற்றி, இந்த வீட்டு அம்மாளிடத்தில் பேசி விட்டுப் போக வந்தோம். நாங்கள் பலர் வரவில்லை. நானும் இன்னொரு அம்மாளுமே வந்திருக்கிறோம். இந்த பங்களாவிலிருக்கும் பாலாம் பாள் அம்மாளுக்கு உடம்பு இன்னமும் அசெளக்கியமாக இருக்கிற தென்று போலீசார் சொன்னார்கள். இருந்தாலும், நாங்கள் கருதி வந்த காரியம் மிகவும் அவசரமானது ஆகையால், அந்த அம்மாளுக்குக் கொஞ்சம் சிரமம் கொடுப்பதாய் இருந்தாலும் பாதக மில்லை என்று நினைத்து வந்தோம். தயவு செய்து நீங்கள் உள்ளே போய் நாங்கள் வந்திருப்பதாகவும், உள்ளே ? வேண்டும் என்று பிரியப்படுவதாகவும் சொல்லுங்கள்” என்று மிகுந்த அன்போடு கூறினார்.

உட்புறத்தில் நின்ற மனிதர் இருவரும் முதலியார் பேசி முடிப்பதற்குள், தமது லாந்தரை வெளிப்பக்கம் நன்றாகத் திருப்பி, சிவஞான முதலியாரையும், அருகில் நின்ற பெட்டி வண்டியையும், அதற்குள் உட்கார்ந்து தனது முகத்தை வெளியில் நீட்டிக் கொண் டிருந்த கல்யாணியம்மாளையும், வண்டிக்காரனையும் ஏற் இறங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/262&oldid=649757" இலிருந்து மீள்விக்கப்பட்டது