பக்கம்:மதன கல்யாணி-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 45 தெரியாதிருந்தன. ஹோமத்தீக்கருகில் ஒரு வெள்ளித் தட்டில் கூறைச் சேலை, வஸ்திரம், திருமாங்கல்யம், பழம், தாம்பூலம் முதலியவை வைக்கப்பட்டிருந்தன. உடனே புரோகிதர் எழுந்து அந்தத் தட்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டு, எல்லோருக்கும் எதிரில் நீட்டிக் கொண்டே ஜன்னலண்டை வர, அதற்குள் கல்யாணியம்மாள் முன்னும், கோமளவல்லியம்மாள் பின்னுமாக ஜன்னலண்டையில் வந்து நின்றதைக் கண்ட புரோகிதர் அவர் களுக்குச் சமீபத்தில் வந்து, "சம்பந்தியம்மாள் தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கள்" என்று கூறிய வண்ணம், தட்டை நீட்டினார்: மேளவாத்தியங்களினது ஒசையில், அவர் சொன்ன வார்த்தை இன்னதென்பது தெரியாமல் மறைந்து போய் விட்டதாகையால், கல்யாணியம்மாள் அதை உணரவில்லை. அப்போது அவளது கைமாத்திரம் தானாகவே நீண்டு சென்று, மாங்கலியத்தைத் தொடடுவிடடு உள்ளே வந்தது. உடனே புரோகிதர் தாளங்களை ஜிஞ்ஜிஞ்ஜிஞ் என்று பலமாகத் தட்டும்படி சொல்லிக் கொண்டே அப்புறம் திரும்ப, வாத்தியக்காரர்கள் தெய்வ துந்துபிபோல முழக்கத் தொடங்கினார்கள். அதுகாறும் மணமக்களினது பக்கத்தில் நின்று மறைத்துக் கொண்டிருந்தவர்களும், தாரைவார்த்துக் கொடுத்தவர்களுமான இருவரும் அப்படியே நிற்க, புரோகிதர் திருமாங்கலியத்தை எடுத்து மணமகனிடத்தில் கொடுக்க, அவன், பெண்ணின் கழுத்தில் அதைக் கட்ட, அந்தச் சமயத்தில் மணி டான்டானென்று ஒன்பதடித்தது. பெண்ணையும் பிள்ளையையும் மறைத்துக் கொண்டிருந்த இருவரும் அந்த சமயத்தில் அப்பால் விலகினர். என்ன ஆச்சரியம்! என்ன கண்கட்டு வித்தை! மோகனரங்கனே மணமகனாகவும், பக்கத்திலிருந்த பெண் துரைஸானியம்மாளாகவும் இருக்கக் கண்ட கல்யாணியம்மாளும், கோமளவல்லியும் பேச்சு மூச்சற்று சித்திரப் பாவைகள் போல மாறி, இரண்டொரு நிமிஷ நேரம் பிரமித்து நின்றபின் தங்களது முகத்தைத் திருப்பி, தாங்கள் இருந்த ஹாலிற்குள் சற்று துரத்தில் கிடந்த சோபாவை நோக்க, அதன்மேல் சாய்ந்திருந்த துரைஸானி யம்மாள் காணப்படவிலலை. அவர்கள் தங்களது கண்களை நம்பாமல் அவைகளைத் துடைத்துவிட்டுக் கொண்டு பார்த்தார். தாங்கள் ஒருகால் தூக்கத்திலாழ்ந்து, கனவு காண்கிறோமோ என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/49&oldid=853447" இலிருந்து மீள்விக்கப்பட்டது