பக்கம்:மதன கல்யாணி-3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 41 அறைக்குள் நுழைந்து பார்த்துவிட்டு வெளியில் வந்த கல்யாணி யம்மாள் அந்த ஹாலின் கடைசி வரையில் போய்ப் பார்த்தாள்: அவ்விடத்தில் பின்புறக் கதவு காணப்பட்டது. அந்தக் கதவும் வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருந்தது. கல்யாணியம்மாள் அதற்கு உட்புறத்திலிருந்த தாளைப் போட்டுக் கொண்டு திரும்பி வந்தாள். அதுவரையில் கோமளவல்லியம்மாளும் தனது தாயுடன் கூடவே சென்று திரும்பினாள். அப்போது கல்யாணியம்மாள் கோமளவல்லியை நோக்கி, "நீயும் அக்காளும் ஏதாவது தாகத்துக்குச் சாப்பிடுகிறீர்களா?" என்றாள். அவள் துரைஸானியம்மாளிடம் போய் கேட்க, தனக் கொன்றும் தேவையில்லை என்று மறுமொழி கூற, கோமளவல்லி யும் அப்படியே சொல்லிவிட்டாள். உடனே கல்யாணியம்மாள் கோமளவல்லியை ஒரு சோபாவின் மேல் படுத்துக் கொள்ள சொல்லிவிட்டு, ஒரு சாய்மான நாற்காலியில் உட்கார்ந்து சாய்ந்து கொண்டாள். அந்த ஹாலில் இரண்டு மின்சார விளக்குகள் பளிச் சென்று பிரகாசித்துக் கொண்டிருந்தன. மின்சார விசிறிகள் சுகமான காற்றை உண்டாக்கிக் கொண்டிருந்தன. கோமளவல்லி ஒரு சோபாவிலும், துரைஸானியம்மாள் இன்னொரு சோபாவிலும் உட்கார்ந்து சாய்ந்து கொண்டிருந்தனர். தாங்கள் மிகவும் பாதுகாப் ப்ான இடத்திலிருப்பதாகக் கோமளவல்லியும் கல்யாணியம்மாளும் நினைத்தார்கள் ஆனாலும், அவர்ளது திகிலும் கவலையும் அப் போதும் நீங்காமலேயே இருந்தமையால், அவர்கள் நன்றாக வாய் திறந்து ஒருவரோடொருவர் ஒங்கிப் பேசவும் அஞ்சி, அந்த மகா பயங்கரமான இரவு எப்போது கழியும் என்று மிகுந்த ஆவலும் கலக்கமும் கொண்டிருந்தனர். சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத் தில் மணி 8-40 ஆகியிருந்தது. தனக்கு வந்த கடிதத்தில் சரியாக ஒன்பது மணிக்குக் கலியாணத்தை முடிக்கப் போவதாக எழுதப் பட்டிருந்ததிலிருந்து, எதிரியின் ஆள்கள் அந்நேரம் தனது பங்களா வில் நுழைந்து, பெருத்த கலகம் விளைவித்துக் கொண்டிருப்பார்கள் என்றும், தனது பங்களாவில் உள்ள பொருட்களை எல்லாம் அவர்கள் கொள்ளையடித்திருப்பார்கள் என்றும், சிவஞான முதலியாரும் மற்றவர்களும் கொல்லப்பட்டிருப்பார்களோ என்றும் கல்யாணியம்மாளும் கோமளவல்லியம்மாளும் பலவாறு சிந்தித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/45&oldid=853443" இலிருந்து மீள்விக்கப்பட்டது