பக்கம்:வாழ்க்கை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

45


நாம் நமக்குள்ளயே உணர்ந்து கொள்ளும் சட்டமே நம் வாழ்க்கையின் விதி என்பதை அறிவோம். அதுவே உலகின் வெளித் தோற்றங்களான எல்லாப் பொருள்களுக்கும் விதியாகும். நாம் உணர்வதற்கும், வெளியே அந்த விதி நிறைவேறி வருவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. வெளியுலக சம்பந்தமாக அந்த விதி நிறைவேறுவதில் நாம் கலந்து கொள்வதில்லை.

நாம் உலகைப் பற்றித் தெரிந்துள்ள அறிவு முழுதும் பகுத்தறிவின் விதிக்கு இயைந்து நடப்பதிலேயே அடங்கியிருக்கிறது. வெளியுலகில் இவ் விதிக்கு இயைந்து நடப்பதைக் கண்ணால் காண்கிறோம்; நமக்குள்ளேயே நாம் இயைந்து நடக்க வேண்டிய சட்டம் இது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

வாழ்க்கையின் நியதி என்பது பகுத்தறிவின் சட்டமேயாகும். மனிதன் மூன்று நியதிகளுக்கு (அல்லது விதிகளுக்கு) உட்பட்டு நடக்கவேண்டியிருக்கிறது. அவன் உடலில் சேர்ந்துள்ள சடப் பொருள்கள் மற்ற உலகிலுள்ள சடப் பொருள்களுக்கு உரிய விதிப்படி நடந்து தீர வேண்டும். உடல் மற்ற மிருகங்களின் உடல்களைப் போன்றதே ; ஆதலால் இது மிருக இயல்புக்கு உரிய விதிப்படி நடந்து தீர வேண்டும். இந்த இரண்டு விதிகளோடு மூன்றாவதான பகுத்தறிவின் விதியும் இருப்பாத மனிதன் ஏற்றுக் கொள்கிறான். மற்ற இரண்டு விதிகளும் மனிதன் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நிறைவேறக் கூடியவை. ஆனால், பகுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/52&oldid=1123801" இலிருந்து மீள்விக்கப்பட்டது