உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

35


நற்றினை தெளிவுரை


செம்பொன்னாற் செய்யப் பெற்ற தொடியானது கழன்று சோர் தலைப் பார்த்தவனாக, நம் சிறந்த மகன் வந்து, நம்மை அழுதபடியே அணைத்துக் கொண்டோனாய், அதுதான் கழல்வது ஏனோ அன்னாய்?' என வினவுகின்ற அந்த இனிய அழுகையினது மழலைக்குரலைக் கேட்ரும்போதெல்லாம், நம் தலைவனிடத்தே மேலும் விருப்பங் கொண்டேமாய்த் தளர் கின்ற மனத்தை உடையேமாகிய நம்மிடத்திற்கே, அவரும் விரைவில் வந்து சேர்வர். அதனால், துயரற்றனையாய், இனிதே இன்பத்து ஆழ்ந்தனையாய், நெடிது மகிழ்வாயாக என்பது கருத்து.

பார்வை

என்பது

சொற்பொருள்: கைப்புள். இதனைக் கொண்டு பிறபுட்களை வரச் செய்து, வலைக்குள் அவை வந்து அகப்பட்டுக் கொள்ள, அவற்றை எளிதாகப் பிடிப்பது வேட்டையாடுவோர் கொள்ளும் மரபு ஆகும். படுவலை-அகப்படுத்தும் வலை. வெரீஇ-அச்சங்கொண்டு. தெள்விளி - தெளிந்த கூப்பீட்டுக் குரல். கோடியர்-கோடு- ஊதுகொம்பு; ஊது கொம்பினை உடையவரான கூத்தர்; நரம்பு-நரம்புகளையுடைய யாழைக் குறிப்பது; சினையாகு பெயர். அத்தம்-காட்டு வழி. பம்பை-ஒருவகைத் தோல் வாத்தியம்; தென்பாண்டி நாட்டிலே இந் நாளிலும் வழக் கத்தில் இதே பெயரோடு இருந்து வருகின்றது. கதம்-சினம். வடுகர்-வடுகுமொழி பேசுவோர்; தமிழகத்தின் வடபுற வெல்லைப் பகுதியில் வாழ்ந்தோர். நீந்தி-கடந்து; முயற்சி யோடே கடப்பது பற்றி நீந்தி என்றனர். கழல் தொடி- கழலும் தொடி; தொடி செறிப்புத் தளர்ந்து கழலுதல் பிரிவுத் துயரத்தின் உடல்நலிவினால். கவவு-உடலோடு ஒன்ற அணைத்துக் கொள்ளுதல். அவவு-அவா; ஆசை.

மெய்

விளக்கம்: பிரிவுத் துயரின் மிகுதியாலே இளைத்ததனைக் குறிக்கக் ‘கழல் தொடி' என்றாள்; அதனை நோக்கிய புதல்வன் வருந்தித் தாயை அணைத்து அழு கின்றனன். 'தன் சோர்வைக் கண்டு வருந்தும் இச் சிறு புதல்வனின் உள்ளந்தானும் தலைவனுக்கு இல்லையே' என நினைக்கத், தலைவியின் துயரம் மிகுதியாவதுடன், தலைவனை அணைத்து மகிழத் துடிக்கும் ஆசையும் பெருகுவதாயிற்று என்க. தனித்திருக்கும் கணந்துள் பறவையானது, வேட்டு வனின் படுவலைக்கு அஞ்சி வெருவுவதுபோன்று, தலைவியும் அத்தத்து வருவோனாகிய தலைவனின் பயணத்தில் ஆபத்து நிகழுமோ எனக் கவலையுற்றுப் புலம்புவாள் என்பதாம். அதன் தெள்விளியோடு கோடியரின் யாழொலியும் சேர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/41&oldid=1641376" இலிருந்து மீள்விக்கப்பட்டது