இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
183
போர்ப் படலம்
இயல் 82
மூவகத்தார் படையெடுத்து வரல றிந்து முறுவலனும் கோளரிதான் முகம லர்ந்தான்
விளர்த்துவரும் வானத்தைச் செம்மை யாக்கி
விரிகதிரோன் ஒளிப்பிழம்பாய் மேலெ ழுந்தான்; வளர்த்துவரும் போர்த்திறமை மிக்க காளை மாவலியோ டுலவிவரும் பொழுது, வான விளக்கினையும் மறைப்பதுபோல் துாசி வெள்ளம் வெளிவானிற் படரக்கண் டுசாவி நின்ருன்; தளத் துயரும் ஓரரங்கில் ஏறி நின்று
தன்துணையாம் மாவலியன் நோக்கிச் சொல்வான். 363
கரைபுரண்டு வருகின்ற வெள்ளம் போலக்
கனன்றபெரும் படையொன்று நம்மை நோக்கித்
திரைபுரண்ட கடலொலிபோல் ஆர்ப்பெ ழுப்பிச்
சீறியிவண் வருகின்ற தென்று கூறத்
தரைவியந்த கோளரியும் ஏறி நின்று
தாங்கரிய கடலொன்று வருதல் கண்டான்;
கரைகடந்த மகிழ்ச்சியில்ை உரத்துக் கூவிக்
கள்ளுண்டு களித்தான்போல் துள்ளிச் சென்ருன். 364
| ச. வி-வினவி. திரை-அலை. இவண்-இங்கே,