பக்கம்:வீர காவியம்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

போர்ப் படலம்


இயல் 82 மூவகத்தார் படையெடுத்து வரல றிந்து முறுவலனும் கோளரிதான் முகம லர்ந்தான் விளர்த்துவரும் வானத்தைச் செம்மை யாக்கி விரிகதிரோன் ஒளிப்பிழம்பாய் மேலெ ழுந்தான்; வளர்த்துவரும் போர்த்திறமை மிக்க காளை மாவலியோ டுலவிவரும் பொழுது, வான விளக்கினையும் மறைப்பதுபோல் துாசி வெள்ளம் வெளிவானிற் படரக்கண் டுசாவி நின்ருன்; தளத் துயரும் ஓரரங்கில் ஏறி நின்று தன்துணையாம் மாவலியன் நோக்கிச் சொல்வான். 363 கரைபுரண்டு வருகின்ற வெள்ளம் போலக் கனன்றபெரும் படையொன்று நம்மை நோக்கித் திரைபுரண்ட கடலொலிபோல் ஆர்ப்பெ ழுப்பிச் சீறியிவண் வருகின்ற தென்று கூறத் தரைவியந்த கோளரியும் ஏறி நின்று தாங்கரிய கடலொன்று வருதல் கண்டான்; கரைகடந்த மகிழ்ச்சியில்ை உரத்துக் கூவிக் கள்ளுண்டு களித்தான்போல் துள்ளிச் சென்ருன். 364 | ச. வி-வினவி. திரை-அலை. இவண்-இங்கே,