பக்கம்:வாழ்க்கை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வாழ்க்கை


செல்வதாக எண்ணுவது போல் தான் இந்த எண்ணமும்.

குழந்தை வளர்ந்து வரும்போது அதற்கு வாழ்க்கையின் சிக்கலோ, முரண்பாடோ, எதுவும் தெரியாது. தன்னைச் சுற்றி யிருப்பவர்களைப் பார்த்துப் பார்த்து அதுவும் பழகிக்கொள்கிறது. சுற்றியிருப்புவர்கள் போலி விஞ்ஞானக் கொள்கையைப் பின்பற்றினாலும், மத ஆசாரங்களில் வெளிச் சடங்கு மட்டும் பின்பற்றினாலும், குழந்தையும் அவர் அநுசரித்து நடந்துகொள்ளும். அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் திருப்தியடைவது போலவே அதுவும் திருப்தியடையும்.

ஏழைக் குழந்தை தன் பெற்றோர்கயே பின்பற்றும். நிறையப் பணமும் உணவும் கிடைக்க வேண்டும். ஆனால், வேலை குறைவாயிருக்க வேண்டும் -இதுவே வாழ்க்கை என்று அது கருதும். செல்வக் குழந்தை, தன் பெற்றோர்களைப் போல், செல்வங்கள் சேர்ப்பதும், கௌரவங்கள் பெறுவதுமாகக் காலத்தைச் சந்தோஷமாக கழிப்பதே வாழ்க்கை என்று கருதும் இந்த இரண்டு குழந்தைகளின் நோக்கமும் ஒன்று தான் ; முடிந்தவரை தங்கள் வாழ்க்கை சுகமாய் கழிய வேண்டும்.

ஏழை தன் சுகத்தைப் பெருக்கிக்கொள்ள விரும்புகிறான் ; அதற்குத் தேவையான அறிவைத் தேடி அலைகிறான். பணக்காரனும் தன் சுகத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகிறான் ; தன் களைப்பு நீங்கி, நேரம் இன்பகரமாகக் கழிவதற்காக விஞ்ஞானத்தையும் கலைகளையும் பற்றிய அறிவைத் தேடுகிறான். பிற்காலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/29&oldid=1123792" இலிருந்து மீள்விக்கப்பட்டது