குடிமையும் காமையும் 75 வாய்ப்பறையாகவும் தாக்கடிப்பாகவுங் கொண்டு மற்றவர் பால் விரைந்து சென்று ட்ரைத்துப் பரப்புவர். இன்றேல் அவர்க்கு அது பெரும்பாசமாக இருக்கும். 'எச்சிற் கையால் காக்கையையும் ஒட்டான்' என்பது நம் நாட்டில் வழங்கும் ஒரு பழமொழி. உண்டு கழுவப் பெருத கையில் சிறு சோற்றுப் பருக்கைகள் ஒட்டி விருக்கலாம். அக் கையைச் சிதறிஞல் ஒட்டிய வருக்கைகள் தரையில் சித்திவிடும். அவற்றைக் காக்கைகள் உண்டுவிடுமே என்றெண்ணிக் கயவர் எச்சில் கையைச் சிதறமாட்டார் என்பர். இதற்கு மேலும் கயவர் வன்னெஞ்சமுடையவர் என்பதை வள்ளுவர் விளக்குந்திறம் வியப்பை விளேப்பதாகும். கயவர் உண்டு கழுவிய ஈர்ங்கையையும் தரையில் சிதரும். எவரேனும் அவ் ஈர்ங்கையைத் தெறிக்க வேண்டுமென்று இரந்தாலும் தெறிக்கமாட்டார். ஆளுல், கையை முறுக்கி ஓங்கிப் பற்கள் சிதறுமாறு கன்னத்தில் அறையும் பொல்லார்க்கு எல்லாம் கொடுத்துப் போவர் என்று சொல்லுவார் வள்ளுவர். 'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடி.துடைக்கும் கூன்கையர் அல்ல தவர்க்கு” என்பது அவர் சொல்லமுதமாகும். சரக்கையை உதறினல் ஒட்டிய நீர் மற்றவர்க்கு உதவிவிடுமோ என்ற எண்ணத்தால் உதருர் போலும். அஃதன்றிக் கையி -ணின்று சிதறிய நீரால் தரையில் முளைத்த புல் தழைத்து விடுமோ என்றும் சிதறமாட்டார்கள். இங்ங்னம் கயவரது ஈரமற்ற வன்னெஞ்சத்தை வள்ளுவரைப்போல் விளக் கிளுர் யாவர் ?
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/79
Appearance