பக்கம்:வாழ்க்கை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வாழ்க்கை


மனிதன் தன்னை அறிகிறான். அதனாலேயே உலகை அறிய முடிகிறது. அவனுக்கும் உலகத்திற்கும் மூன்றுவித சம்பந்தங்கள் இருக்கிறன: அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சியின் சம்பந்தம், அவனுடைய மிருக உடலின் சம்பந்தம், அந்த மிருக உடலில் அமைந்துள்ள சடப்பொருளின் சம்பந்தம் இந்த மூன்று சம்பந்தங்களையும் அவன் தன்னிடத்திலே காண்கிறான். இதைக் கொண்டு உலகிலே அவன் பார்க்கின்ற பொருள்கள் அனைத்தையும் கீழ்க் கண்ட மூன்று பிரிவுகளில் அவை எதைச் சேர்ந்தவை என்று பகுத்து அறிகிறான் : (1) அறிவுள்ள பிராணிகள், (2) மிருகங்களும் தாவரங்களும், (3) சடப்பொருள்.

சடப்பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதால் உயிர்ப் பிராணிகளைப் பற்றியும், உயிர்ப் பிராணிகளிலிருந்து மனிதர்களைப் பற்றியும் மனிதன் தெரிந்து கொள்வதில்லை. இதற்கு மாறாகத் தன்னிலிருந்து மற்ற மனிதர்களையும், மனிதர்களிலிருந்து விலங்கினங்கள் தாவரங்களையும், அவைகளிலிருந்து சடப் பொருளையும் அறிகிறான்.

நாம் நம்மை அறிந்துகொள்ள வேண்டும். உண்மையில் நமக்கு நம்மைப் பற்றித்தான் தெரியும். நம்மைப் பற்றிய அறிவின் பிரதிபிம்பமே மிருகங்கள் தாவரங்களைப் பற்றிய அறிவு. சடப்பொருள்களைப் பற்றிய அறிவு பிரதிபிம்பத்தின் பிரதிபிம்பமே.

நமக்கும் நாம் பார்க்கும் பொருள்களுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொண்டே நாம் அவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது ; காலத்தையும் இடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/67&oldid=1123810" இலிருந்து மீள்விக்கப்பட்டது