சேல்வமும் நல்குரவும் 53 இங்ஙனம் இம்மை இன்பத்திற்கு இன்றியமையாத செல்வத்தைப் பல்வகையாலும் ஈட்டுதல் வேண்டும். திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்சூர் தமிழ் மூதாட்டியார். மனிதன் தனது வாழ்வை மானமுடைய தாகப் பேணிக்கொள்ள, உணவிற்கும் உடைக்குமேனும் பனந்தேடக் கடமைப்பட்டவன். அதற்காகப் பிறர்பால் சென்று சேவகம் செய்வச் சிலர், செல்வரிடம் போய் யாசிப்பர் சிலர். கடல் கடந்து அயல்நாடு புகுந்து வாணிகம் பேணுவர் சிலர். நாடகம் ஆடுவர் சிலர். 'நாடாளுவர் சிலர். பாவாணராய்ப் பாட்டிசைப்பர் சிலர், இங்ங்ணம் பாழாகும் உடம்பிற்கு நாழி அரிசி உணவை நாடி, மக்கள் என்ன பாடுபடுகின்றனர் என்று இரங்கிஞர் தமிழ் மூதாட்டியார். "சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கட்த்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பும் யாழின் உடம்பை வயிற்றின் கொடுகையால் நாழி அரிசிக்கே நாம்' என்பது அச் செல்வியார் காட்டும் நல்வழியாகும். செல்வத்தைத் தேடுக என்று செப்ப வந்த தெய்வப் புலவர் செய்க பொருளே என்று அறவுரை பகர்ந்தார். உலகில் பல நலங்களும் தமக்கு உண்டாகவேண்டும் என்று எண்ணுவார், செல்வத்தைத் தரும் நல்வழியில் சென்று முயல்க : அச் செயலே செல்வத்தைச் சேர்க்க வல்லது முயற்சி திருவினையாக்கும் ; தளராத ஊக்க முடையானே ஆக்கம் வழி வினவிக்கொண்டு வந்து சேரும் என்ற கருத்தெல்லாம் பொதிகச் செயலே முன்னரும் பொருளைப் பின்னரும் குறித்தார். இச் செல்வத்தால் அடையும் சிறப்பிற்கு ஓர் எல்லை சொல்லுவார்போலப், பகைவர் செருக்கினை அறுக்கும் படைக்கலம் செல்வமே ;
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/59
Appearance