கள்ளும் கதுைக் 翻麗 நெருப்பை வைத்தனர். அப்பொழுதே அந்தப் பிணம் உயிர்பெற்று எழுந்தது. இது கள்ளுண்ட மயக்கம் என்று சொல்லி அங்கு நின்றும் ஓடியது. பக்கத்திலிருந்த கள்ளுக்கடையின் உள்ளே புகுந்தது. இங்கனம் கள்ளுண்டவன் அடையும் அவல நிலையையும் அவன் அக் கள்ளின்மேல் கொண்டுள்ள காதல் பெருக்கையும் அழகுற விளக்கிளுர் வேதநாயகம் பிள்ளை. ஐம்பெருங் காவியங்களில் ஒன்ருகிய மணிமேகலையில் ஆதிரை என்னும் நல்லாளைப் பற்றிச் சொல்லுகிருர், ஆசிரியர் சீத்தலைச் சாத்தனர். ஆதிரை தன் கணவனே தெய்வமெனக் கருதி வாழ்ந்த காரிகை. அவள் திருவன திரைநாளில் பிறந்தமையால் அப்பெயரைப் பெற்ருள் - போலும் அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை, ஆதிரை நல்லாளின் அணிமனை முற்றத்தை அடைந்து புனையா ஓவியம் போல நின்ருள். அவளைக் கண்ட ஆதிரை உணவை உள்ளன்புடன் கொண்டுவந்து வலமாகச் சுற்றி வணங்கிப் பாகம் அடங்கலும் பசிப்பிணி அறு'கென வாழ்த்திப் பாத்திரம் நிறையப் பிச்சையிட்டாள். இத்தகைய கற்பாசியின் கணவனுய சாதுவன் வாணிகத்தின் பொருட்டுக் கப்பலேறி வங்க நாட்டுக்குப் புறப்பட்டான். கப்பல் கடல் நடுவே சென்றுகொண் டிருக்கும்போது கடுஞ் சுழல்காற்று எழுந்தது. கப்பல் சின்ன பின்னமாகச் சிதறுண்டு கடலுள் தாழ்ந்தது. கப்பலி னின்று தப்பிய சாதுவன், சிதைந்து மிதந்த கட்டை யொன்றைப் பற்றிக்கொண்டு பலநாள் அலைகளால் அலைப் புண்டு நாகர் மலையை வந்தடைந்தான். அங்கு வாழ்ந்த நாகர் என்னும் வகுப்பார் சாதுவனைத் தம் தலைவன் பால் அழைத்துக் கொண்டுசென்று நிறுத்தினர். பசியா வ, சொ.-iii -ே
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/87
Appearance