பக்கம்:வெள்ளை யானை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.யுத்த காண்டம்

ஆசிரமப் பணியில்
தன்னை
முழுமையாகக்
கரைத்துக் கொண்ட
அகலிகையின் உள்ளம்
பகலில் -
சலனமற்ற தெளிந்த நீரோடை

ஆனால் -
இருள் கவிந்தபிறகு
அவள் அடிமனத்தில்
நிஜம் விழித்துக் கொண்டு
ஆழத்தில் அமுக்கப்பட்ட
சுரைக் குடுவையாக
மேலே எம்பிக் குதிக்கும்.

சில சமயம்
பாலாகக் கொதித்துப்
பொங்கி வழியும்.

காற்று மண்டலத்தைக்
கடந்தவர்
கனமிழந்து தவிப்பது போல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/20&oldid=1310327" இலிருந்து மீள்விக்கப்பட்டது