பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

499


'வயங்கு ஒளி மழுங்கிய மாதர்தின் முகம்போல்' -இத் தாமரை உள்ளது -என்றாள். இதுகொண்டும் தாழையின் தாதுத்துாள் தூசிபோன்று மங்கிய வெண்மை நிறங்கொண்டதும் காணப்பட்டது. இத்துாள் மணமுள்ளது மகளிர் தூவியும் பூசியும் படிய வைத்தும் களிப்பர். "தாது துகள் உதிர்த்த தாழையங் கூந்தல்” என்றமை கொண்டு இத்தூளைச் சோற்றிலிருந்து கூந்தலில் உதிரச் செய்துகொள்வர் என்று தெரிகின்றது. மலரையும் சோற்றையும் தூளையும் கூட்டி இவை மணம் பரப்புவதை மாறன் பொறையனார் பாடினார். மலர் வளைந்த முள்ளைக்கொண்டது. மடல்மடலாக அமைந்தது. கூம்பியிருந்த முகை அவிழ்ந்தால் ஒளிப் பூ ஆகும். மடல்களின் உள்ளே சோற்றுத் திரள் வெண்ணெய் போன்று தோன்றும். இவற்றால் தாழை தழைத்துள்ள சூழலெல்லாம் மணம் கமழும். அம்மணம் தெய்வ மணம் போன் றது’ -என்னும் பொருள் அமைத்துப் பாடினார். "மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்' என்னும் மூதுரைப் பாடல் தாழம்பூ'மணமற்றதுபோன்ற குறிப்பைத் தருகின் றது. மகிழம் பூவின் சிறுமையையும் தாழை மடலின் பருமையையும் நோக்க இதன் மணம் குறைவாகப் படலாம். இயல்பில் தாழம்பூ மனத்திற் குறிக்கத்தக்கது. இங்கு தெய்வ மணங் கமழும் என்றது போன்று முன்னர் விழாக் களம் போன்று கமழ்வதைக் கண்டோம். கடற்கரையில் அமைந்த பாக்கத்துச் சிறுகுடியில் பரவியுள்ள புலால் வீச்சைப் போக்கும் செயலையும் இம்மணம் செய்யும். 'சிறுகுடிப் பாக்கத்து மறுகுபுலாம் அறுக்கும்’ ே "புலவுப் பொருதழித்த பூநாறு பரப்பு’’ + -என்றும் , 'கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழை" -என்றும் 1 மணி 4 : 1.5 4. அகம் 31 : 8. 2 அகம் : 853 : 19. சிலம்பு 6 166, 3 நற் : 203 : 6,