பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510


நாகம் வேறு ஞாழல் வேறு. குறிஞ்சிப்பாட்டில், ஞாழலும் நறவமும் நாகமும் தனித்தனியே காட்டப்பட்டுள்ளன. எனவே, பலினி தவிர மற்றைப் பெயர்கள் ஞாழலுக்கு உரியன அல்ல. கல்லாடம், "பொன்னுறு ஞாழல் புலிநகம் கடுக்கும்' - என ஞாழற் பூ புலி நகம்போன்றதாகப்பாடியது. இதுகொண்டே இரண்டிடங் களில் உ. வே. சா. அவர்கள் ஞாழலைப் புலிநகக்கொன்றை என்று குறித்தார்கள். புலிநகத்தின் வடிவம். அளவு இரண்டிற்கும் எவ்வகையிலும் இந்தப் பொடிப் பூ ஒத்து நிற்பதன்று. தமிழின் சிறப்பெழுத்தைத் தன்னிடையே கொண்ட ஞாழல் பொடிப் பூ வாயினும் தமிழ்ச் சான்றோர்தம் இயற்கை மனப்படிவில் தோய்ந்தது. இப் பூவால் பெயர் பெற்ற புலவர்கள், மதுரை அளக்கர் ஞாழலார், குமிழி ஞாழலார் நப்பசலையார் என்னும் இருவர். இருபாற்புலவர்கள் இப்பெயர் பெற்றமை ஒரு சிறப்பாகின்றது. 9. வலம்புரி மலர்; தொடை மலர். மராஅம்-கடம்பு. செம்மையும் வெண்மையும் கொண்ட ஒரினப் பூக்களின் வரிசையில் கடம்பு இடம் பெற்றதாகும். இதில் செங்கடப்பம் பூ வெண்கடப்பம் பூ என இருவகைகள் உள. இவ்விரு நிறங்களை யும் கொண்ட பிற பூக்களுக்கும் இதற்கும் குறிப்பிடத்தக்க வேறு பாடு உண்டு. பிற பூக்கள் இவ்விரு நிறவேறுபாடு ஒன்றன்றிப் பிற தன்மைகளில் ஒத்தவை. இக்கடம்பம் பூ இரண்டும் மரத் தால் ஒத்தவை. நிறத்தால் மட்டுமன்றி நிலத்தாலும், பூக்கும் பருவத்தாலும், மலரின் அமைப்பாலும் வேறுபாடுடையவை. இவை மட்டுமன்றிப் பெயராலும் ஒரு வேறுபாட்டுக் குறிப்பு உண்டு. செங்கடம்பு, வெண்கடம்பு இரண்டற்கும் பொதுப்பெயர் மராஅம் என்பது. மராஅம் என்றாலும் மரவம் என்றாலும் ஒன்றே. (குராம்-குரவம் என்பது போன்றது) மராஅம் என்பது இரண்டற் 1 கல்லாடம் : 50 : 6