பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. நள்ளிருள் நாறி மலர்.

மயிலை.

குறிஞ்சிப்பாட்டில் இடுகுறிப் பெயர்களால் குறிக்கப்படும் மலர்கள் பல, காரண இடுகுறியாகக் குறிக்கப்படுபவை சில. காரணப்பெயராக குறிக்கப்படுபவை மிகச் சில. ஒரு மலர் மட்டும் காரணச் சிறப்புப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. அவ்வொன்றும் நள்ளிரவில் மலர்ந்து மணக்கும் காரணத்தைக்கொண்டு 'நள்ளிருள் நாறி' எனப்பட்டுள்ளது. பூவிற்குரிய பெயரன்றி அடைமொழியளவில் மட்டும் குறிக்கப் படுவது இஃதொன்றே. பிற்காலத்தில் ஒரு மரத்தைப் பீ நாறி” என்றனர். ஒரு செடிக்குப் "பீ நாறிச் சங்கு' என்று பெயர்.

பெரும்புலவர் கபிலரால் கூறப்பட்டுள்ள "நள்ளிருள் நாறிப் பூ எது? இதற்கு நச்சினார்க்கினியர் 'இருவாட்சிப் பூ' என்று, பொருள் எழுதியுள்ளார். இதற்கு அடிக்குறிப்பெழுதிய உ. வே. சா. அவர்கள், 'இருள் வாசி என்பது இருவாட்சி யென்று வழங்குகின்றது" -என்று எழுதிக் காட்டியுள்ளார்கள். இருளில் மலர்ந்து மணப்பது என்னும் பொருள் தரும் 'இருள்வாசி' என்பது 'நள்ளிருள் நாறி என்பதன் வடமொழிக் கலப்புடைய ஒரு மொழி மாற்றாக உள்ளது. 'இருள்வாசி' என்பது இருவாட்சி என வழக்கில் மருவும். காலப்போக்கில் இருவாட்சியிலுள்ள "இரு என்பதற்கு இரண்டு என்று பொருள்கொண்டு, வாட்சி என்பதை வாய்ச்சி' எனக்கொண்டு இரண்டு வாய்போல மலர் வது என்னும் பொருளில் இருவாய்ச்சி என்றனர். இதன் முகை வெடிப்பாக மலர்வதைக்கொண்டும், மலர்ச்சி வாய் அளவில் அமைவது கொண்டும் பரஞ்சோதி முனிவர் இதனை "வெடிவாய்ச் சாதி" என்றார். இவ்வாறாக இதன் பெயர் சிறு குழப்பத்தை ஏற்படுத்தியது. 1 குறி. பா 94, 帶 36