30 வீடும் வெளியும் "பந்தர் என்ருல் குரங்கு. பந்தார் ಸ್ಥೇನ್ತ கடை. நீங்கள் உங்கள் கடைப் பெயரை சுதேசி பந்தர் ஆக்க வேண்டாம், சுதேசி பந்தார் என்று மாற்றலாம். என்றேன்' சொக்கையா விளக்கியதும், முதலாளி அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். சொக்கையா, நீ பெரிய ஆளப்பா' என்ருர், - "பின்னே? பெரிய மனிதர்களோடு பழகுவதற்கு, தானும் பெரிய மனிதன் ஆகித்தானே தீரனும்! அது போகுது. நீங்க ஏன் என்னை அழைத்தீர்கள்?’ என்று: கண்ேடும் அவசரப்படுத்தினுள் கவிராயர். -
- அதைச் சொல்லிக் கொண்டிருந்தபோதுதான் நீ" ஊடே கரடியை விட்டே'
- தம்ம பேச்சிலே குரங்குதான் புகுந்தது: கரடி திலே காட்டவே இல்லை’ என்று தன் சாமர்த்தியத்தை விளம் பரப்படுத்திஞர் கவி.
"அது சரி. நான் சொல்றதைக் கேளு. இப்படி ஒரு மாறுதல் பண்ணுவதே பெரிய விஷயம் இல்லையா? அதை ஒரு விழா மாதிரிச் செய்யலாம்னு நினைக்கிறேன். அதுக்காக நீ நாலஞ்சு பாட்டுகள் பாடி ஜமாய்க்க வேணும்.” கவிராயருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. "ஆமா.. இப்போது கடையில் இருக்கிற பட்டு ஜவுளிகள், மல், பீல்களை எல்லாம் என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று. கேட்டு வைத்தார். "அதுபற்றி நான் இன்னும் முடிவு பண்ணலே. எப்பவாவது ஒரு சமயத்தில் ஏலம் விட்டால் போகுது' "அதைவிட இப்பவே பிரமாதமான ஒரு வேலை பண்ணலாமே! எல்லாவற்றுக்கும் தீ வைத்துவிட்டால்? உங்க நோக்கம் ரெண்டு வகையிலும் நிறைவேறும். துணிச்சலாகக் காரியம் செய்த பெருமையும் கிடைக்கும்; பழைய ஸ்டாக்கும் சுலபமாகக் காலியாகிவிடும்’ என்று.