பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா நக கல்க

நோய் தீர்க்க வந்தானென்று உள்ளுறையுவமஞ் செய்தவாறு கண்டுகொள்க.1

இனிக், கிழவோட் குவமம் பிரிவிடத்துரித்து' என்பது பாடமாக உரைப்பாருமுளர். யாதானுமொரு நிலத்தாயினும் பிரிந்திருந்தவிடத்து உள்ளுறையுவமங் கூறப்பெறுங் கிழத்தி யென்பது இதன் கருத்து. பெருந்தண்வாடையின் முந்து

வந்தோனென்பது பிரிவன்றாகலின் ஈரிடமென்றலே வலி தென்பது. (உக) ஆய்வுரை

இது, தலைவி உள்ளுறை கூறுதற்குரியசூழ்நிலையிதுவென உணர்த்துகின்றது.(இ- ள்) தலைவி கூறுதற்குரிய உள்ளுறையுவமை இரண்டிடத்து உரியதாகும் எ-து.

இரண்டிடமாவன மேற்குறித்த இனிதுறுகிளவியுந் துனியுறுகிளவி

யுமாகிய இரண்டிடங்கள். இவ்விரு நிலைகளில் தலைவி உள்ளுறை கூறுதற்குரியள் எனவே இவ்விரண்டுமல்லாத ஏனைய நிலைகளில் தலைவி உள்ளுறையுவமம் கூறப்பெறாள் என்பதாம்.

க. கிழவோ ற் காயின் இடம்வரை வின்றே.” இளம்பூரணம்

என்-னிைன். தலைமகற்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று

(இ - ள்) தலைமகன் உவமை கூறுதல் எப்பொருட்கண்ணு மாம் என்றவாறு.* (க.உ)

1. பெருந்தண் வாடையின் முந்துவங்தனன்’ எனத் தலைவி கூற்றாகவரும் ஐங்குறுநூற்றுப்பாடல் பிரிவல்லாத குறிஞ்சித்திணை பற்றிவருதலின் தலைவி பிரிந்தி ருக்தவிடத்தே உள்ளுறையுவமங் கூறப்பெறும் என்றல் பொருக்தக மையான் இலக்கியத் தோடு பொருங்தி வருவது, 'ஈரிடத் துரித்து' என்ற பாடமே என்பது கன்கு வலியுறுதல் க: ண்க .

2. இங்கு இடம் என்றது, உவமை கூறுதற்குரிய செல்வியினை . 3. எட்பொருட் கண்ணும்- எல்லாப்பொருள் கிகழ்ச்சிக்கன்னும்.