பக்கம்:ஓங்குக உலகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு.வி.க. சில நினைவுகள்

45


நால்வருள் மற்ற இருவர் எஸ்.சீனிவாச ஐயங்கார், இராஜாஜி ஆகியோர் ஆவார்கள். (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு-பக்கம் 388) எனவே என் பதினோராவது வயதில் முதல்முதல் நான் ‘திரு.வி.க.’ அவர்களைச் சந்தித்தேன். ஆனாலும் அப்போது அவரைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

பின் நான் செங்கற்பட்டில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது நாட்டில் விடுதலைக் கிளர்ச்சி எழ, காந்தி அடிகளாரின் தண்டி உப்புச் சத்தியாக்கிரகம் நடைபெற்ற காலத்தில் திரு.வி.க. நவசக்தியின் எழுத்துக்களும், பிற நூல்களும் (சிறப்பாக மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்) என் உள்ளத்தைத் தொட்டன. அதன் பிறகு ஓரிருமுறை சென்னை வந்தபோது அவர்கள் இல்லத்தில் சென்று அவர்களைக் கண்டுவந்தேன்.

1938-ல் எங்கள் ஊர் இறைவனுக்கென அமைத்த மண்டபத்தினை அவர்கள் கையால் திறக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அவர்களும் இசைந்து ஊருக்கு வந்து ஒருநாள் முழுதும் தங்கினார்கள். அப்போதுதான் அவர்களுடன் நெருங்கிப் பழகிப் பேச வாய்ப்பு வந்தது. அவர்கள் கூறிய அறிவுரைகள் பல-விளக்கங்கள் பல. அவ்வாறே காஞ்சிபுரம் குமரன் அச்சகத் திறப்புவிழா, திருவதிகை சைவசித்தாந்த சமாசம் (அவர் தலைவர்) ஆகிய நிகழ்ச்சிகளில் அவரோடு உடன் உறையும் வாய்ப்பினால் அவர் என்னை நன்கு புரிந்து கொண்டார். நான் அவரை நன்கு உணர்ந்து கொண்டேன்.

பின் 1941-ல் என் அன்னையார் மறைந்தபோது அன்னையின் இறுதி நாள் சடங்கினைத் ‘திரு.வி.க.’ அவர்களே வந்து நடத்தி வைத்தார்கள், தம்முடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/48&oldid=1127327" இலிருந்து மீள்விக்கப்பட்டது