பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்குதல் காயசண்டிகை வடிவத்துடன் வெளிப் போந்த மணிமேகலை அவ்வடிவத்தை மாற்ருமலேயே தனது அறச்செயலே ஆற்றி வந்தாள். ஒருநாள் அவள் அப் புகார் நகரத்திலுள்ள சிறைக்கோட்டத்தின் பக்கத்தே சேர்ந்தாள். அங்குப் பசியால் வந்துற்ற மக்களே அரு ளுடன் நோக்கி அமுதுாட்டினுள். அவள் ஒரு பாத்திரத் திலிருந்தே பலருக்கும் உணவளித்தலேக் கண்ட சிறைக் காவலர் பெருவியப்புக் கொண்டனர். அச் செய்தியைச் சோழனகிய மாவண்கிள்ளிக்கு அறிவித்தனர். அம் மன்னன், மணிமேகலையை வரவழைத்து, அவள்பால் அமுதசுரபியின் சிறப்பைக் கேட்டு அறிந்தான். அவளே நோக்கி, யான் செய்ய வேண்டுவது யாது?’ என்று கேட்டான். அவள், "இச் சிறைக்கோட்டத்தை அழித்து அறவோர் வாழும் அறக்கோட்டமாக ஆக்குதல் வேண்டும்,' என்று அன்புடன் வேண்டினள். சோழன், அன்றே அவள் விரும்பிய வண்ணம் அச் சிறைச்சாலை யைச் சிறந்த அறச் சாலையாக்கி அகமகிழ்வித்தான். காஞ்சனன் வாளால் எறிதல் மன்னன் மகனகிய உதயகுமரன் மணிமேகலைபால் கொண்ட விருப்பம் குன்ருதவய்ை, மீண்டும் அவள் இருக்கும் உலகவறவியை அடைந்தான். அப்பொழுது காயசண்டிகையைக் காணுதற்கு வந்த அவள் கணவ கிைய காஞ்சனன் என்னும் விஞ்சையன், காயசண் டிகை வடிவத்துடன் அறச்செயல் புரியும் மணிமேகலை யைக் கண்டான். அவள், தன் மனேவியே என்று நினேந்து அவள் அருகில் சென்று காதல் கட்பினைப் புலப்படுத்தும் கனிந்த மொழிகளேப் பேசினன். அவள்