பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 உரைத்தும் வேண்டி நிற்பாராயினர். ஆண்டவன் க ரு 8ண .ெ ச ய் து மரணந்தவிர்ப்பான் என்று நெஞ்சையள்ளும் பாட்டொன்று பாடுகின் ருர். நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் துாற்றெழுங்கண் ணிர்அத ைலுடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே யென்னுரிமை நாயகனே என்று வனைந்துவனந் தேத்துது நாம் வம்மினுல கியவீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாங் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருண மிதுவே -திரு. 6 : 110 : 1 என்று கூறியவண்ணம் இறைவனே வழிபாடு செய்து ஏத்தித் துதிக்கவேண்டும் என்பதாயிற்று. நினைந்து நினைந்து என்று அடுக்கிக்கூறிய அதனுல் நினைந்து, நினைந்து, நினைந்து, நினைந்து, நினைந்து, பற்பலகால் நினைப்பற நினைந்து என்று பொருள் படும். பற்று நினைந்து எழுவது நமது மனத்தின் பண்பாதலின் இறைவனே நினைக்கும்போது மற் ருென்று பற்றித்திரியாமல் இடையருது நினைத்தல் வேண்டும் என்பார் நினைந்து நினைந்து என்ருர். மற்று, நீடுநினைப்பதால் உணர்வு உண்டாகும் ஆதலின் உணர்வு வருந்துணையும் நினைந்திருக்க வேண்டும் என்பதும் ஒன்று. உணர்வு என்பது இங்கே பேருணர்ச்சி.