பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செம்மணிக்கல் மலர்,

திலகம்

திலகம் என்பது குறிஞ்சிநிலத்து மரம். "நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்' என மலைநிலத்து மரங்களுடன் பாடப் பட்டது. அவற்றிலும் நாக மரத்துடன் பல இடங்களில் பாடப் பட்டுள்ளது. மேலே கண்ட மலைபடுகடாத்துப் பாடல் அடியை ஒர் எழுத்தும் மாற்றாமல் இளங்கோவடிகளார் தொடுத்துப் பாடியுள்ளார்.2 நிகண்டுகள் யாவும் திலகம் மஞ்சாடி' என ஒரே தொடரில் மஞ்சாடி மரமாகக் கூறியுள்ளன. நச்சர் மலைபடுகடாத் தில் 'திலகப்'பூ' என எழுதினாலும் குறிஞ்சிப் பாட்டில் 'மஞ்சாடி மரப் பூ' என்று எழுதினார். சிலம்பில் வரும் திலகத்திற்கும் அரும்பத உரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் 'மஞ்சாடி' என்றே பொருள் கொண்டனர். எனவே மஞ்சாடி' என்பது இதன் மறுபெயர் எனலாம். சங்க இலக்கியங்களில் மஞ்சாடி இல்லையாகையால் இடைக்கால வழக்காகின்றது. நிறுத்தல் அளவைப் பெயர்களுள் பொன்னை நிறுக்கும் அளவை ஒன்று 'மஞ்சாடி' என்னும் பெயர்கொண்டது. இது மஞ்சாடி மரத்தின் விதை. இரண்டு குன்றி மணி எடை கொண்டது. - - குறிஞ்சிப்பாட்டில், திலகம்' என்னும் சொல் மட்டும் பூவிற்காகக் குறிக்கப்பட்டுள்ளது.4 பிற சார்வுகளால் இப் பூ குறிஞ்சிநிலத்தின் கோட்டுப் பூ ஆகின்றது. நாகத்துடன் பேசப் படுவதால் அதற்குரிய வேனிற் பருவமே இம்மலருக்கும் உரிய தாகும் - மாணிக்கக்கல் வகைகளில் குருவிந்தம்' என்பது ஒன்று இதன் நிறத்திற்கு எட்டு பொருள்களின் நிறத்தைக் கூறி யுள்ளனர். சிலப்பதிகார உரைமேற்கோளாக வரும் பழம் பாடல்க இத்திலக மலரின் நிறத்தையும் கூறுகின்றது. கல்லாடமும் (98 : 32) திருவிளையாடற் பு ரா ன மும் 1 மலை : 520, 4 குறி. பா : 74. 2. சிலம்பு : 25 18, த சிலம்பு 14 : 184 உரை மேற்கோள் 3 பிங். தி : 2587, х . -- 举42