பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732


ஒவ்வொரு தனிப் பூவும் பயிற்றம்பயறு அளவில் சிறு சிறு பஞ்சு மொட்டாகத் தோன்றும். இதனையும் பாலை நிலப் பூவாகக் கொள்ளலாம். பூளைக்குரிய பஞ்சுப் பொருளும் இங்கு பொருந்தும். கண்ணில் ஒதுங்கும் கசடு பூளை எனப்படும். தாயுமானவர் கண்களில் வெண்பூளை கரப்ப' -என்றார். இதனையும் 'கண்பீளை என்பர். கண்பூளை வெண்மை நிறத்தில் குழைந்த மாப்பதத்தில் தோன்றும். சிறுபூளையின் மலர் இதே வெண்மை யில் இதுபோன்ற வடிவமைப்புடையது. மருத்துவ நூல்கள் சிறுபூளைக்குச் சிறுகண்பிளை, கண் பீளை எனும் மாற்றுப் பெயர்களைக் குறிக்கின்றன. உவமப் பொருத்தம் இப்பெயர் வழங்கச் செய்தது. கண்ணகியார் குறை திரத் தோழி தேவந்தி என்பாள் பாசண்டச் சாத்தன் என்னும் சிறுதெய்வத்தை வேண்டினாள். வேண்டித் தொழுதபோது . அறுகு சிறு பூளை நெல்லொடு துரய் உச்சென்று பெறுக கணவனோடு என்றாள்"2 -என இளங்கோவடிகளார் இப்பூவைப் பலிப் பூவாகக் காட்டியுள்ளார். எளிய பலிப் பூ வானாலும் மருத்துவத்தில் நீரடைப்பைப் போக்கும் நன்மருந் தாகும. . 5. புளிங்கூழ் மலர், வேளை. "தாதெரு மறு கிற் போதொடு பொதுளிய வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளிஇ ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை (புளிக்கூழ்) இது கோப்பெருஞ் சோழன் பாடல். வேளைச்செடி தெருக்குப்பை மேட்டில் வளரும். அதன் பூ போதுகளுடன் கொத்தாகத் தோன்றும். வெண்மை நிறமுள்ளது. இடைக்குல மடந்தை இப் பூவைக் கொய்து தயிரில் இட்டுப் பிசைந்து துணைக்கறி தாயு. பா மாதரை : 5 8 upib : 2{5 { 2-مُٹھیس சிலம்பு 19:43, 44