பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. 76. 77. 78. 79. 80. 98 இதைக் கடந்தவர்கள் யார்? மெஜெல்லன் 1520இல் கடந்தார். டிரேக்1577இல் கடந்தார். இதை ஆராய்ந்தவர் யார்? கேப்டன் குக் தம் பயணங்களின் பொழுது ஆராய்ந்தார். இவர் நாடுகண்ட சிறந்த பெருமக்களில் ஒருவர். இதன் உள்நாட்டுக் கடல்கள் யாவை? பெரிங் கடல், ஜப்பான் கடல், மஞ்சள் கடல், சீனக் கடல். இதன் நீரோட்டங்கள் யாவை? நடுக்கோட்டு நீரோட்டம், பெருவியன் நீரோட்டம், ஜப்பான் நீரோட்டம். பசிபிக் கடலின் கனிவளம் எவ்வாறு உள்ளது? இக்கடலில் ஹாவாய், மெக்சிகோ ஆகியவற்றிற்கு இடையே 4000-3000 மீட்டர் ஆழத்தில் உருளைக் கிழங்கு வடிவத்தில் மாங்கனீஸ் முண்டுகள் உள்ளன. இவற்றில் நிக்கல், கொபால்ட் மாங்கனீஸ் ஆகிய உலோகங்கள் அதிகமுள்ளன. மெக்சிகோ வளைகுடாவில் கந்தகம் 15 மீட்டர் ஆழத்தில் உள்ளது. பசிபிக் பற்றிய புதிய செய்திகள் யாவை? 1.இக்கடலின் ஆழங்களில் வியத்தகு விலங்குகள் உள்ளன. 2. 1000 காற்று வெளி அளவுக்கு அழுத்தம் உள்ளது. 3. 8000 மீட்டர் ஆழத்திலும் உயிர்கள் வாழ்கின்றன. 4. வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையில் வாழ இங்கு ஆழ்கடல் உயிர்கள் தகைவாற்றல் பெற்றுள்ளன. 5. குரிலிஸ்-காம்சாட்கா அகழி பசிபிக் கடலில் ஆழமா னது. இங்கு முட்தோலிகள், நத்தைகள் முதலியவை வாழ்கின்றன. புதிய கண்டுபிடிப்பு போகனோபோரா (துளை உடலிகள்). இவை கடற் கரையில் பதிந்துள்ள நீண்ட குழாய்களில் வாழ்கின்றன. 6. கடல் தரையில் பொராயினிபெரா உயிர்கள் அதிகம் வாழ்கின்றன. 7. கடல் உயிர் பற்றிய விதிகள் சில கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.