10
விடுதலைக்குப் பின் வயதானவர்களும் படிக்க தொடங்கினர். அநேகமாக இவர்கள் வயதுடைய அனைவரும் முதியோர் பள்ளியில் படித்தவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களே' என்றார்.
வழித் தோழருக்கு நன்றி சொல்லிவிட்டுத், தொடர்ந்து நடந்தோம். எங்கள் கருத்துகளேப் பரிமாறிக் கொண்டோம். இதோ அக் கருத்துக் கதம்பம்:
"நாற்பது வயதானதும் நாளே எண்ணிக் கொண்டு, வேளையை எதிர்பார்த்து உட்கார்ந் திருக்கும் நாம் எங்கே!
எந்த வயதிலும் புதியதைக் கற்கலாம். கற்காதவரை பிறமொழி; கற்றபின் தம் மொழி என்பதை உணர்ந்துள்ள உஸ்பெக் பாட்டிகள் எங்கே!
இரவு, படம் பார்க்க மட்டுமே என்று வளரும் நாம் எங்கே!
இரவு, பாடம் படிக்கவுமான நேரம், புதுமொழி கற்கவுமான நேரம் என்று, காலத்தை வீணாக்காத உஸ்பெக் பாட்டிகள் எங்கே !
பகலெல்லாம் பண்ணேயிலே பாடுபடவா?’ என்று திண்ணையிலே கூடி வம்பளக்கும் நாம் எங்கே?
பகலெல்லாம் பாடுபட்டால் என்ன? உழைப்பிற்கு ஊறுகாய் படிப்பல்லவா என்று புத்தம் புதிய கலைகளைக் கற்கும் உஸ்பெக் பாட்டிகள் எங்கே!" இப்படி ஏங்கின எங்கள் உள்ளம்.