பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 சுந்தரவடிவேலு

வளருக்குச் சொன்னது, தன் வீட்டிற்கே வந்தபோது, அதைத் தாங்கிக்கொள்ள இயலாமையாலா?

வயது முதிர முதிர, சில தீவிரவாதிகள், சாதுக்களாகி விடுவதைப்போல், கழுவாய் தேடும் அளவு நலிந்து போவதைப் பொன்று, தளர்ந்துவிட்டாரா?

படிப்பில் நாட்டம் கொள்ளாத பிரிவிலே வாழ்ந்திடினும் மூத்த மகனைச் சிறந்த பட்டதாரியாக்கிப் பார்த்தவர், எனக்குத் தன் சாதியில் பெரிய இடத்தில் பெண் எடுக்க நினைத்தது, நடவாமல் போன மாற்றத்தாலா?

தம்முடைய உறவினர்கள் தன் குடும்பத்தை விலக்கி வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தாலா?

அப்படி நேராவிட்டாலும், மற்ற மூன்ற தம்பிகளுக்கும் எந்தக் கொண்டைகட்டியாரும் பெண் கொடுக்க மாட்டார்களே, என்ற

" ( - ,

சிறிய தாயார் ஏன் அப்படிச் சொன்னார்? மாகறலிலேயே, இசை வெளாளர் வீடுகளோடு உறவு கொண்டு இருந்த இரண்டொரு பெரியவர்கள் பெயர்களைப் பெருமையோடு கூறினார்.

நான் அப்படி வைத்துக்கொண்டால், தவறில்லை என்று முடிவு கூறினார். -

ஆனால், குடும்ப வளர்ச்சிக்காக, பிறந்த பிரிவில் ஒருத்தியை மனம் செய்துகொள்ளும்படி ஏன் கெஞ்சினார்?

‘ஒழுக்கம் கெட்டவனாக இருந்தால் தவறில்லை; சாதி கெட்டவனாக இருப்பது பெரும் குறை என்பதுதானே என் சிறிய மாயார் கருத்து!

அதுதானே சமுதாயத்தின் கருத்து!

சாதியைக் காப்பதற்காகவே இருப்பதாக ஒரு மயக்கம், அதுவும் லைமுறை தோறும் உறுதி செய்யப்படும் உணர்வு.

குணத்தைக் காட்டிலும் குலத்தை முன்னிறுத்தும் நாம் முன்னேறுவோமா?

இப்படியெல்லாம் எண்ணிக் குழம்பிற்று, என் சிந்தனை.

வவரோ, எப்படியோ, எந்நிலையிலோ சொன்ன சாதி உயர்வு தாழ்வு _ார்வைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு நாம் அனைவரும் வெளிவர 1)யலாது, தத்தளிக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/57&oldid=623426" இலிருந்து மீள்விக்கப்பட்டது