பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 நினைவு அலைகள்

‘என்ன அய்யா? அலமாரிகள் ஏன் திறந்து கிடக்கின்றன?’ என்று அவர் கேட்டபோதே, அறையைக் கூர்ந்து கவனித்தேன்.

திறந்த அலமாரிகளிடம் சென்று பார்த்தோம். அவற்றிலிருந்த பொருள்கள் இறைந்து கிடந்தன. ஒவ்வொரு தட்டாக ஆய்ந்தேன்.

சிறப்பான போர் ஆதரவுப் பணிக்காக எனக்குக் கொடுக்கப்பட்ட பதக்கம் களவாடப்பட்டிருந்தது; சொக்காய்கள் சில இருந்த இடத்தில் இல்லை.

பிறகு, வீட்டிற்குள் போய்ப் பார்த்தோம். என்னிடம் விலை மதிப்புள்ள பொருள்கள் இல்லாமையால் வேறெதுவும் களவாடப்பட வில்லை என்று தெரிந்துகொண்டேன்.

ஆனால், வீட்டின் பின் தகவின் தாழ்ப்பாள் திறக்கப்பட்டிருந்தது. திருடர்கள் கொண்டு வந்த இரும்பு ரம்பத்தை அங்கே போட்டுவிட்டுப் போயிருந்தனர்.

அதைக் கண்ட ஊழியர்,

‘அய்யா மன்னிக்கணும். நீங்கள் எப்போதும் நாய்த் துக்கம் துாங்குகிறவர்கள். எப்படித்தான் இவ்வளவு நடந்ததும் தெரியாமல் அயர்ந்து துங்கிவிட்டீர்கள்! இல்லாவிட்டால் திருடர்கள் என்ன செய்திருப்பார்களோ அய்யா தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று’ என்று ஆறுதல் அடையுங்கள் அய்யா’ என்று தேற்றினார்.

திருவள்ளுவன் பிறந்தான்

11-12-1949 அன்று மாலை இப்போது பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும் அப்போதைய பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள, டாக்டர் ஆ. இலட்சுமணசாமி முதலியாரின் ‘கென்சிங்டன் மருத்துவ இல்லத்தில் காந்தம்மா ஒரு மகனைப் பெற்றார்.

பிள்ளைப்பேறு எளிதாக இல்லை. டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் அன்று ஊரில் இருந்து அவரே மிகுந்த கவனத்துடன் மருத்துவம் பார்த்ததால், தாயும் சேயும் பிழைத்தனர்.

அவ்வேளை, மாநகராட்சி தொடக்கப் பள்ளிக் கட்டடத் திறப்பு விழாவிற்காக நான் சைதாப்பேட்டைக்குச் சென்றிருந்தேன். ஆபத்து இல்லை’ என்ற நிலை வந்த பிறகே, நான் வந்து சேர்ந்தேன்.

அந்தக் குழந்தை தனிப்பொலிவோடு இருந்தது. பிள்ளைக்கலி தீர்ந்தது என்று மகிழ்ந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/324&oldid=623244" இலிருந்து மீள்விக்கப்பட்டது